கொரோனா பேரிடர்கால உதவி மையம் திறப்பு


கொரோனா பேரிடர்கால உதவி மையம் திறப்பு
x
தினத்தந்தி 27 May 2021 10:59 PM IST (Updated: 27 May 2021 10:59 PM IST)
t-max-icont-min-icon

கொரோனா பேரிடர்கால உதவி மையம் திறக்கப்பட்டது.

கீழக்கரை, 
பெரியப் பட்டினத்தில் கொரோனா நிவாரண பணிகளுக் காக பெரியபட்டினம் ஊராட்சி மன்றம் மற்றும் பாப்புலர் ப்ரண்ட் ஆப் இந்தியா சார்பில் பேரிடர் உதவி மையம் திறக்கப்பட்டது. இதில் இலவசமாக மருத்துவ உபகரணங்கள் கொரோனா தடுப்பூசி விழிப்புணர்வு முகாம் அமைத்தல், உணவு பொருட்கள், ஆக்சிஜன் சிலிண்டர், இறந்தவர்களின் உடலை அடக்கம் செய்தல், ஆம்புலன்ஸ் ஏற்பாடு செய்தல் மற்றும் நோயாளியை பரிசோதனை செய்தல் போன்ற பணிகளை மேற்கொள்ள உள்ளனர். இந்த மையத்தை திருப்புல்லாணி வட்டார மருத்துவர் ராசிக்தீன் திறந்துவைத்தார். டாக்டர் நிவின் சன், சுகாதார ஆய்வாளர் கதிரேசன் ஆகியோர் சிறப்பு அழைப்பாளராக கலந்துகொண்டனர். ராமநாதபுரம் மாவட்ட பாப்புலர் ப்ரண்ட் ஆப் இந்தியா தலைவர் முகமது மன்சூர் தலைமை தாங்கினார். மாநில செயலாளர் முகமது ரசின், ஊராட்சி கவுன்சிலர் பெரோஸ்கான் ஆகியோர் முன்னிலை வகித்தனர். இந்த மையத்தை பொதுமக்கள் பயன்படுத்திகொள்ள ஊராட்சி நிர்வாகம் சார்பில் கேட்டுக்கொள்ளப்பட்டது. 

Next Story