சுய கட்டுப்பாடு இருந்தால் மட்டுமே கொரோனா பரவலை தடுக்க முடியும் பொதுமக்களுக்கு அதிகாரிகள் அறிவுரை


சுய கட்டுப்பாடு இருந்தால் மட்டுமே கொரோனா பரவலை தடுக்க முடியும் பொதுமக்களுக்கு அதிகாரிகள் அறிவுரை
x
தினத்தந்தி 27 May 2021 11:11 PM IST (Updated: 27 May 2021 11:11 PM IST)
t-max-icont-min-icon

ஊரடங்கு அமலில் இருந்தும் வாகன போக்குவரத்து அதிகரித்து உள்ளது. சுய கட்டுப்பாடு இருந்தால் மட்டுமே கொரோனா பரவலை தடுக்க முடியும் என்று பொதுமக்களுக்கு அதிகாரிகள் அறிவுறுத்தி உள்ளனர்.

பொள்ளாச்சி

ஊரடங்கு அமலில் இருந்தும் வாகன போக்குவரத்து அதிகரித்து உள்ளது. சுய கட்டுப்பாடு இருந்தால் மட்டுமே கொரோனா பரவலை தடுக்க முடியும் என்று பொதுமக்களுக்கு அதிகாரிகள் அறிவுறுத்தி உள்ளனர்.

ஊரடங்கு கட்டுப்பாடுகள்

தமிழகத்தில் கொரோனா 2-வது அலை பெரும் தாக்கத்தை ஏற்படுத்தி உள்ளது. இதை கட்டுப்படுத்த கடந்த 24-ந் தேதி முதல் தளர்வுகள் இல்லாத ஊரடங்கு அமலில் உள்ளது. 

இதனால் காய்கறி, மளிகை உள்பட அனைத்து கடைகளும் அடைக்கப்பட்டு உள்ளது. ஆனாலும் வழக்கம் போல் பொதுமக்கள் நடமாட்டம் உள்ளது. 

பொள்ளாச்சியில் உள்ள நியூ ஸ்கீம் ரோடு, கோவை ரோட்டில் எப்போதும் போன்று வாகன போக்குவரத்து அதிகமாக காணப் படுகிறது. தொற்று பரவலை தடுக்கவே ஊரடங்கு அமல்படுத்தப்பட்டு உள்ளது. 

ஆனால் பொதுமக்கள் தேவையில்லாமல் வெளியே செல்கிறார்கள். இதன் காரணமாக கொரோனா பாதிப்பு அதிகரிக்கும் அபாயம் ஏற்பட்டு உள்ளது. 

இதுகுறித்து சுகாதாரத்துறை அதிகாரிகள் கூறியதாவது:-

பொய்யான தகவல் 

கொரோனா பாதிப்பு மட்டுமல்லாமல் உயிரிழப்புகளும் அதிகரித்து வருகிறது.  ஆனால் பொதுமக்கள் கொரோனா குறித்த எந்தவித அச்சமும் இல்லாமல் வெளியே சென்று வருகிறார்கள். 

போலீசார் வாகன சோதனையின்போது பிடித்தால் மருந்து கடை, ஆஸ்பத்திரிக்கு செல்வதாக கூறுகின்றனர். இன்னும் சிலர் கொரோனா பாதிப்பு உள்ளதாக கூறுகின்றனர். 

இதன் காரணமாக போலீசார் அவர்கள் அருகில் செல்லவே அச்சப்படுகின்ற னர். இதை தங்களுக்கு சாதகமாக பயன்படுத்தி சிலர், பொய்யாத தகவலை கூறி போலீசாரிடம் இருந்து தப்பி செல்லும் நிலை ஏற்பட்டு உள்ளது. 

பொதுமக்கள் ஒத்துழைப்பு 

ஊரடங்கின் முக்கியத்துவத்தை அறிந்து கொரோனா பாதிப்பை தடுக்க பொதுமக்களுக்கு சுய கட்டுப்பாடு இருக்க வேண்டும். அவசர தேவைகளுக்கு மட்டும் வெளியே செல்ல வேண்டும். 

ஊரடங்கை பொதுமக்கள் முழுமையாக கடைப்பிடித்தாலே தொற்று பரவலை தடுத்து விடலாம். எனவே அரசின் தடுப்பு நடவடிக்கைகளுக்கு பொதுமக்கள் ஒத்துழைப்பு அளிக்க வேண்டும்.

இவ்வாறு அவர்கள் கூறினார்கள்.


Next Story