ஊரடங்கில் ஊர் சுற்றியவர்களுக்கு அபராதம்


ஊரடங்கில் ஊர் சுற்றியவர்களுக்கு அபராதம்
x
தினத்தந்தி 27 May 2021 11:11 PM IST (Updated: 27 May 2021 11:11 PM IST)
t-max-icont-min-icon

மண்டபம் பேரூராட்சி பகுதியில் ஊரடங்கில் ஊர் சுற்றியவர்களுக்கு அபராதம் விதிக்கப்பட்டது.

பனைக்குளம், 
மண்டபம் பேரூராட்சி பகுதியில் ஊரடங்கில் ஊர் சுற்றியவர்களுக்கு அபராதம் விதிக்கப்பட்டது.
தடுப்பு பணி
முழுஊரடங்கு அமலில் உள்ளதால் ராமநாதபுரம் மாவட்ட கலெக்டர் தினேஷ் பொன்ராஜ் ஆலிவர் மற்றும் சிவகங்கை மண்டல பேரூராட்சிகளின் உதவி இயக்குனர்  மாடசாமி சுந்தரராஜ் அறிவுரைகளின்படி மண்டபம் பேரூராட்சி பகுதியில் கொேரானா தடுப்பு பணிகள் தீவிரப்படுத்தப்பட்டு உள்ளது.
இந்தநிலையில் கொேரானா தடுப்பு சிறப்பு குழுவை சேர்ந்த ராமநாதபுரம் தாசில்தார் ரவிச்சந்திரன், துணை தாசில்தார், சாமிநாதன், மண்டபம் பேரூராட்சி செயல் அலுவலர் இளவரசி, சுகாதார ஆய்வாளர் ராமச்சந்திரன், சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர் மாதவன், மண்டபம் பேரூராட்சி இளநிலை உதவியாளர் முனியசாமி உள்ளிட்ட பணியாளர்கள் மண்டபம் பேரூராட்சி பகுதி முழுவதும் நேற்று தீவிர கண்காணிப்பு பணியில் ஈடுபட்டனர். 
அப்போது மண்டபம்  வங்கியில் மீன்பிடி காலத்தில் மீனவர்களுக்கு வழங்கப்படும் நிவாரணத் தொகை ரூ.5 ஆயிரத்தை  எடுப்பதற்கு கூடியிருந்த மீனவர்களை சமூக இடைவெளி விட்டு நிவாரணத் தொகையை பெற செல்லுமாறு அறிவுறுத்தினர். 
எச்சரிக்கை
ரேஷன் கடைகளில் பொருட்களை வாங்க நின்ற பொதுமக்களை சமூக இடைவெளிகளை பின்பற்றி பொருட்களை வாங்கிச் செல்ல வலியுறுத்தினர். மேலும் ஊரடங்கு காலத்தில் விதிகளை மீறி தேவையில்லாமல் வெளியில் சுற்றி திரிந்தவர்களுக்கு அபராதம் விதித் ததுடன் தேவையின்றி வெளியில் சுற்றக்கூடாது என்று எச்சரித்து அனுப்பி வைத்தனர்.

Next Story