கொரோனா பரவல் தடுப்பு பணிகளை முதன்மை செயலாளர் நேரில் ஆய்வு
கொரோனா பரவல் தடுப்பு பணிகளை முதன்மை செயலாளர் நேரில் ஆய்வு
கோவை
கோவையில் கொரோனா பரவல் தடுப்பு பணிகளை அரசு முதன்மை செயலாளர் எம்.ஏ.சித்திக் நேற்று நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்.
முதன்மை செயலாளர் ஆய்வு
கோவை மாவட்டத்தில் கொரோனா பரவல் அதிகரித்து வருகிறது. அதற்கான தடுப்புப் பணிகளை ஆய்வு செய்வதற்காக தமிழக அரசின் முதன்மை செயலாளரும், வணிகவரித் துறை ஆணையாளருமான எம்.ஏ.சித்திக் நேற்று கோவை வந்தார். அவர், கோவையில் பல்வேறு இடங்களை நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார். அப்போது கொரோனா தடுப்பு பணிகளை விரைவுபடுத்த உத்தரவிட்டார்
கோவை மாநகராட்சி மத்திய மண்டலத்திற்கு உட்பட்ட காந்திபுரம் பஸ் நிலையத்தில் முதன்மை செயலாளர் எம்.ஏ.சித்திக் ஆய்வு மேற்கொண்டார்.
அப்போது அவர், வீடு வீடாக சென்று பொது மக்களுக்கு ஆக்ஸி மீட்டர் மூலம் ஆக்சிஜன் அளவை கண்டறிதல், தெர்மா மீட்டர் மூலம் வெப்ப அளவு கண்டறியப்படும் முறைகள் குறித்தும் சுகாதார பணியாளர்களுடன் ஆலோசனை நடத்தினார்.
காய்கறி மார்க்கெட்
இதையடுத்து அவர், மேற்கு மண்டலம் மேட்டுப்பாளையம் சாலையில் உள்ள மொத்த காய்கறி கொள்முதல் மார்க்கெட்டில் வியாபாரிகள் குறிப்பிட்ட நேரத்திற்குள் நடமாடும் வாகனங்கள் மூலம் காய்கறிகளை பொதுமக்களுக்கு விற்பனை செய்ய வேண்டும் என்று உத்தரவிட்டார்.
அதே போல் கோவை மாநகராட்சி கமிஷனர் காந்தி மாநகரில் நடமாடும் வாகனங்கள் மூலம் காய்கறிகள் விற்பனை செய்யப்படுவதை நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்.
அப்போது அவர் பொதுமக்களிடம் காய்கறிகளை வாங்க வரும் போது முகக்கவசம் அணியவும், சமூக இடைவெளியை கடைபிடிக்க வும், அனைவரும் அருகில் உள்ள சுகாதார மையங்களுக்கு சென்று தடுப்பூசி போட்டு கொள்ளவும் அறிவுறுத்தினார்.
மேலும் அவர், கோவையில் பல இடங்களில் கிருமிநாசினி தெளிக்கும் பணியையும் பார்வையிட்டனர்.
Related Tags :
Next Story