ஆனைமலை புலிகள் காப்பகம் சார்பில் கொரோனா சிகிச்சை மையத்திற்கு மருத்துவ உபகரணங்கள்
ஆனைமலை புலிகள் காப்பகம் சார்பில் கொரோனா சிகிச்சை மையத்திற்கு மருத்துவ உபகரணங்கள்
வால்பாறை
வால்பாறையில் உள்ள அரசு கல்லூரியில் கொரோனா சிகிச்சை மையம் உள்ளது. இந்த மையத்துக்கு ஆனைமலை புலிகள் காப்பகம் சார்பில் மருத்துவ உபகரணங்கள் வழங்கும் நிகழ்ச்சி நடந்தது.
வால் பாறை வனச்சரக அதிகாரி ஜெயச்சந்திரன் முன்னிலை வகித்தார். புலிகள் காப்பக தலைமையிடத்து உதவி வனப்பாதுகாவலர் பிரசாந்த், அட்டகட்டி பயிற்சி மைய உதவி வனப்பாதுகாவலர் செல்வன் ஆகியோர் தலைமை தாங்கி மருத்துவ உபகரணங் களை தாசில்தார் ராஜாவிடம் வழங்கினார்கள்.
கொரோனா சிகிச்சை மையத்தில் பயன்படுத்த குடிதண்ணீர் சுத்திகரிப்பு எந்திரம், கையுறைகள், முகக்கவசம், கிருமிநாசினி, ஹீட்டர், பாதுகாப்பு உடை உள்ளிட்ட பொருட்கள் வழங்கப்பட்டன.
Related Tags :
Next Story