உணவின்றி தவிக்கும் குரங்குகளுக்கு பழங்கள் வழங்கும் போலீசார்


உணவின்றி தவிக்கும் குரங்குகளுக்கு பழங்கள் வழங்கும் போலீசார்
x
தினத்தந்தி 27 May 2021 11:17 PM IST (Updated: 27 May 2021 11:17 PM IST)
t-max-icont-min-icon

உணவின்றி தவிக்கும் குரங்குகளுக்கு பழங்கள் வழங்கி வரும் போலீசார்.

ஊட்டி

நீலகிரி மாவட்டத்தில் தளர்வுகள் இல்லாத முழு ஊரடங்கு உத்தரவால் மக்கள் நடமாட்டம், வாகன போக்குவரத்து இன்றி சாலைகள் வெறிச்சோடிய நிலையில் காட்சி அளிக்கிறது. இதனால் ஆடு, மாடு, குதிரை போன்ற கால்நடைகள் சாலைகளில் உலா வருவதும், படுத்து ஓய்வெடுப்பதும் வழக்கமாகி விட்டது. 

இந்த நிலையில் மஞ்சூர் பகுதியில் குரங்குகள் கூட்டமாக உணவு கிடைக்காமல் சுற்றித்திரிந்து வந்தன. வழக்கமாக கடைகள் திறந்து இருக்கும் சமயங்களில் கிடைக்கும் மீதமான உணவுகளை சாப்பிட்டது. முழு ஊரடங்கால் கடைகள் அடைக்கப்பட்டதால் உணவின்றி தவித்தன.

 இதைத்தொடர்ந்து மஞ்சூர் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் ராஜ்குமார் மற்றும் போலீசார் உணவின்றி சாலைகளில் சுற்றித்திரியும் குரங்குகளுக்கு உணவு, பழங்கள், தண்ணீர் வழங்கி வருகின்றனர். இதன் மூலம் குரங்குகள் பசியாறுகின்றன. போலீசாரின் இந்த செயலுக்கு பொதுமக்கள் பாராட்டு தெரிவித்துள்ளனர்.

Next Story