கர்நாடகாவில் இருந்து மதுபாட்டில்கள் கடத்தி வந்த போலீஸ்காரர் உறவினருடன் கைது
கர்நாடகாவில் இருந்து மதுபாட்டில்கள் கடத்தி வந்த போலீஸ்காரர் உறவினருடன் கைது செய்யப்பட்டார்.
பாலக்கோடு:
கர்நாடகாவில் இருந்து மதுபாட்டில்கள் கடத்தி வந்த போலீஸ்காரர் உறவினருடன் கைது செய்யப்பட்டார்.
போலீஸ்காரர்
தர்மபுரி மாவட்டம் பஞ்சப்பள்ளி சோதனைச்சாவடியில் பஞ்சப்பள்ளி போலீசார் நேற்று இரவு கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு இருந்தனர். அப்போது மோட்டார் சைக்கிளில் மாரண்டஅள்ளி தொட்ட படகாண்டஅள்ளி கிராமத்தை சேர்ந்த போலீஸ்காரர் தயானந்தன் (வயது28) மற்றும் அவரது உறவினர் இளவரசன் (24) ஆகியோர் மாரண்டஅள்ளி நோக்கி வந்து கொண்டிருந்தனர்.
அவர்கள் வந்த மோட்டார் சைக்கிளில் அட்டை பெட்டி இருந்ததால் சந்தேகமடைந்த பஞ்சப்பள்ளி போலீசார் சோதனை செய்தனர். இதில் கர்நாடகாவில் இருந்து 157 குவார்ட்டர் மதுபாட்டில்கள் கடத்தி வந்தது தெரிய வந்தது.
கைது
அவர்களிடம் இருந்து மதுபாட்டில்கள் மற்றும் மோட்டார் சைக்கிளை பறிமுதல் செய்த போலீசார், மதுபாட்டில்களை கடத்தி வந்த போலீஸ்காரர் தயானந்தனையும், அவருக்கு உடந்தையாக இருந்த அவருடைய உறவினர் இளவரசனையும் கைது செய்து சிறையில் அடைத்தனர்.
கைதான போலீஸ்காரர் தயானந்தன், கிருஷ்ணகிரி மாவட்டம் போச்சம்பள்ளி பட்டாலியனில் பணியாற்றுகிறார். தற்போது கிருஷ்ணகிரி மாவட்டம் தளி போலீஸ் நிலையத்தில் தற்காலிகமாக பணியாற்றி வருகிறார். இவரது தந்தை அதே போலீஸ் நிலையத்தில் சப்-இன்ஸ்பெக்டராக பணியாற்றுகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.
====
Related Tags :
Next Story