நாமக்கல் மாவட்டத்தில் ஒரே நாளில் 883 பேருக்கு கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 28,681 ஆக அதிகரிப்பு
நாமக்கல் மாவட்டத்தில் ஒரே நாளில் 883 பேருக்கு கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 28,681 ஆக அதிகரிப்பு
நாமக்கல்:
நாமக்கல் மாவட்டத்தில் நேற்று ஒரே நாளில் புதிதாக 883 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டு உள்ளது. இதுவரை மாவட்டத்தில் தொற்றால் பாதிக்கப்பட்ட நபர்களின் எண்ணிக்கை 28,681 ஆக அதிகரித்து உள்ளது.
883 பேருக்கு கொரோனா
தமிழக சுகாதாரத்துறை அறிவிப்பின்படி நேற்று முன்தினம் வரை நாமக்கல் மாவட்டத்தில் 27 ஆயிரத்து 792 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டு இருந்தனர். இந்த நிலையில் பிற மாவட்டங்களில் சிகிச்சை பெற்று வந்த 6 பேரின் பெயர் நாமக்கல் மாவட்ட பட்டியலுடன் இணைக்கப்பட்டது. இதனால் நாமக்கல் மாவட்டத்தில் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 27,798 ஆக அதிகரித்தது.
இந்த நிலையில் நேற்று ஒரே நாளில் மேலும் 883 பேருக்கு கொரோனா தொற்று இருப்பது பரிசோதனையில் உறுதி செய்யப்பட்டது. இதனால் நாமக்கல் மாவட்டத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 28,681 ஆக அதிகரித்து உள்ளது.
5,354 பேருக்கு சிகிச்சை
இந்த நிலையில் நேற்று நாமக்கல் மாவட்டத்தில் 416 பேர் கொரோனாவில் இருந்து குணமாகி வீடு திரும்பினர். நாமக்கல் மாவட்டத்தில் இதுவரை 23 ஆயிரத்து 118 பேர் கொரோனாவில் இருந்து குணமாகி வீடு திரும்பி உள்ளனர். 209 பேர் இறந்து விட்ட நிலையில், 5,354 பேருக்கு தொடர்ந்து சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
நாமக்கல் மாவட்டத்தில் கொரோனா பாதிப்பு நாளுக்கு நாள் அதிகரித்து வருவதால், பொதுமக்கள் முழு ஊரடங்கை முழுமையாக கடைபிடிக்க வேண்டும் என சுகாதாரத்துறையினர் வேண்டுகோள் விடுத்து உள்ளனர்.
======
Related Tags :
Next Story