நெல்லை சந்திப்பில் தொடர் மழைக்கு வீடு இடிந்து சேதம்


நெல்லை சந்திப்பில்  தொடர் மழைக்கு வீடு இடிந்து சேதம்
x
தினத்தந்தி 27 May 2021 11:46 PM IST (Updated: 27 May 2021 11:46 PM IST)
t-max-icont-min-icon

நெல்லை சந்திப்பில் தொடர் மழைக்கு வீடு இடிந்து சேதம் அடைந்தது.

நெல்லை:
நெல்லை சந்திப்பில் தொடர் மழைக்கு வீடு இடிந்து சேதம் அடைந்தது.

தொடர் மழை

நெல்லை மாவட்டத்தில் ‘யாஸ்’ புயலால் கடந்த சில நாட்களாக தொடர் மழை பெய்தது. இதனால் அணைகளில் நீர்மட்டம் வேகமாக உயர்ந்து வருகிறது.
மேலும் ஒருசில இடங்களில் மரங்கள் சாய்ந்து விழுந்து சேதங்களை ஏற்படுத்தி வருகிறது.

வீடு இடிந்தது 

இந்த நிலையில் பலத்த மழைக்கு தாக்குப்பிடிக்க முடியாமல் நெல்லை சந்திப்பில் ஒருவரது வீடு இடிந்து விழுந்தது. சந்திப்பு சிந்துபூந்துறை மேட்டுத்தெருவை சேர்ந்தவர் வண்ணமுத்து. இவருடைய வீடு தொடர் மழையால் நனைந்து வலுவிழந்து இருந்தது.

இந்த நிலையில் வீட்டின் சமையல் அறையின் மேல்பகுதி திடீரென்று இடிந்து விழுந்து சேதம் அடைந்தது. அப்போது அந்த அறையில் யாரும் இல்லாததால் தப்பினர். இதுகுறித்து தகவல் அறிந்த வருவாய்த்துறை அதிகாரிகள் சம்பவ இடத்துக்கு வந்து பார்வையிட்டனர்.

Next Story