சாலையோர பள்ளத்தில் கவிழ்ந்த கார்


சாலையோர பள்ளத்தில் கவிழ்ந்த கார்
x
தினத்தந்தி 27 May 2021 11:49 PM IST (Updated: 27 May 2021 11:49 PM IST)
t-max-icont-min-icon

திருப்பத்தூர் அருகே சாலையோர பள்ளத்தில் கார் கவிழ்ந்தது.

திருப்பத்தூர்,

புதுக்கோட்டை மாவட்டம், துவார் கிராமத்தைச் சேர்ந்த சின்னையா மகன் ரெங்கராஜன் (வயது 57). இவர் தமிழ் மாநில காங்கிரஸ் கட்சியில் விவசாய அணி மாநில தலைவராக உள்ளார். இந்த நிலையில் நேற்று மாலை புதுக்கோட்டையில் இருந்து மேலூருக்கு உறவினரின் இறுதி சடங்கு நிகழ்ச்சியில் கலந்து கொள்ள குடும்பத்தினருடன் காரில் வந்து கொண்டு இருந்தார்.
அப்போது சிறுகூடல்பட்டி விலக்கு ரோடு அருகே திடீரென மாடு ஒன்று குறுக்கே வந்ததால் காரை ஓட்டிய டிரைவர் திடீரென்று பிரேக் போட்டார். இதில் டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்த கார் சாலையோர பள்ளத்தில் பாய்ந்து கவிழ்ந்தது. இதில் ரெங்கராஜன் மனைவி செல்விக்கு(45) கழுத்தில் காயம் ஏற்பட்டது. மற்ற 3 பேருக்கு லேசான காயம் ஏற்பட்டது.  செல்வி திருப்பத்தூர் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். இதுகுறித்து கீழச்சிவல்பட்டி போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Next Story