ஊரடங்கு விதிகளை மீறியதாக 43 வாகனங்கள் பறிமுதல்


ஊரடங்கு விதிகளை மீறியதாக  43 வாகனங்கள் பறிமுதல்
x
தினத்தந்தி 28 May 2021 12:07 AM IST (Updated: 28 May 2021 12:07 AM IST)
t-max-icont-min-icon

நெல்லை மாவட்டத்தில் ஊரடங்கு விதிகளை மீறியதாக 43 வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டன.

நெல்லை:

கொரோனா தொற்று வேகமாக பரவி வருவதால் நெல்லை மாவட்டத்தில் போலீஸ் சூப்பிரண்டு மணிவண்ணன் உத்தரவுப்படி ஊரடங்கு விதிகளை மீறுவோர்கள் மீது வழக்குப்பதிவு செய்து, வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டு வருகிறது.

அதன்படி, மாவட்டத்தில் நேற்று விதிகளை மீறி வாகனங்களில் சுற்றி திரிந்தவர்கள் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்து, 43 வாகனங்களை பறிமுதல் செய்தனர். மேலும் பொது இடங்களில் முககவசம் அணியாத 306 பேருக்கும், சமூக இடைவெளியை பின்பற்றாத 7 பேருக்கும் அபராதம் விதிக்கப்பட்டது.

Next Story