தூய்மை பணியாளர்களுக்கு கொரோனா நிவாரண தொகுப்பு


தூய்மை பணியாளர்களுக்கு கொரோனா நிவாரண தொகுப்பு
x
தினத்தந்தி 28 May 2021 12:08 AM IST (Updated: 28 May 2021 12:08 AM IST)
t-max-icont-min-icon

திருப்புவனத்தில் கொரோனா நிவாரண தொகுப்பை தமிழரசி எம்.எல்.ஏ. வழங்கினார்.

திருப்புவனம்,

திருப்புவனம் பகுதியில் தட்டான்குளத்தில் உள்ள செக்டேம் பகுதிக்கு மானாமதுரை தொகுதி தமிழரசி எம்.எல்.ஏ. சென்று அணையை பார்வையிட்டார். மடப்புரம் பகுதிக்கு புதிய கால்வாய் அமைக்க திட்ட மதிப்பீடு தயாரிக்க கோரியும் பிறகு கானூர் பகுதிக்கு புதிதாக செக்டேம் அமைய உள்ள இடத்தையும் பார்வையிட்டு அதிகாரிகளிடம் பாசன விவரங்கள் குறித்து கேட்டறிந்தார். அதன் பின்பு மடப்புரம் ஊராட்சியில் 18 வயது முதல் 44 வயது உள்ளவர்களுக்கு கொரோனா தடுப்பூசி போடுவதை தொடங்கி வைத்தார். அங்கு பணியாற்றும் துப்புரவு பணியாளர்கள், ஆதரவற்றோருக்கு உணவு பொட்டலங்களை வழங்கினார்.
பின்னர் திருப்புவனத்தில் புதிதாக பஸ் நிலையம் அமைவதற்கான இடத்தை பார்வையிட்டார்.அதன்பின்பு திருப்புவனம் தேர்வுநிலை பேரூராட்சியில் பணிபுரியும் தூய்மை பணியாளர்கள் 75 பேருக்கு தலா 5 கிலோ அரிசி, காய்கறி தொகுப்பும் பெண்களுக்கு சேலையும் ஆண்களுக்கு சால்வையும் வழங்கினார்.
இந்த நிகழ்ச்சியில் தி.மு.க. மாவட்ட துணைச்செயலாளர் சேங்கைமாறன், பொதுப்பணித்துறை உதவி செயற்பொறியாளர் முருகேசன், இளநிலை பொறியாளர் சிங்காரவேலன், வட்டார மருத்துவ அலுவலர் டாக்டர் சேதுராமு, திருப்புவனம் பேரூராட்சி செயல் அலுவலர் சந்திரகலா  உள்பட பலர் கலந்து கொண்டனர்.

Next Story