தேவையின்றி சுற்றித் திரிந்தவர்களை ஆம்புலன்சில் ஏற்றிய அதிகாரிகள்
அருப்புக்கோட்டையில் தேவையின்றி சாலையில் சுற்றித் திரிந்தவர்களை பிடித்த வருவாய் துறை அதிகாரிகள் அவர்களை ஆம்புலன்சில் ஏற்றி கட்டாய கொரோனா பரிசோதனை செய்தனர்.
அருப்புக்கோட்டை,
மே.
அருப்புக்கோட்டையில் தேவையின்றி சாலையில் சுற்றித் திரிந்தவர்களை பிடித்த வருவாய் துறை அதிகாரிகள் அவர்களை ஆம்புலன்சில் ஏற்றி கட்டாய கொரோனா பரிசோதனை செய்தனர்.
நடவடிக்கை
அருப்புக்கோட்டையில் கொரோனா பரவல் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. நோய் பரவலை தடுக்க வருவாய்த்துறை, சுகாதார துறை, நகராட்சி துறை அதிகாரிகள் தீவிர நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றனர். அருப்புக்கோட்டை நகராட்சி சார்பில் கொரோனா பரிசோதனை முகாம், தடுப்பூசி முகாம்கள் நகரின் பல்வேறு பகுதிகளில் நடைபெற்று வருகின்றன.
மேலும் முழு ஊரடங்கு காலத்தில் விதிகளை மீறி செயல்படுவோர் மீது அதிகாரிகள் நடவடிக்கை எடுத்து வருகின்றனர். ஆனாலும் சாலைகளில் தேவையின்றி பலர் சுற்றித் திரிந்து வருகின்றனர். கொரோனா குறித்த எந்த பயமும் இல்லாமல் ஏதாவது ஒரு காரணத்தை சொல்லிக் கொண்டு வாகனங்களில் அங்குமிங்குமாக சுற்றி வருகின்றனர்.
ஆம்புலன்சில் ஏற்றினர்
இந்த நிலையில் நேற்று தாசில்தார் ரவிச்சந்திரன் தலைமையில் கிராம நிர்வாக அலுவலர் பிருத்திவிராஜ் மற்றும் வருவாய் துறை அதிகாரிகள் ரோந்துப்பணியில் ஈடுபட்டிருந்தனர்.
அப்போது தேவையின்றி சுற்றித் திரிந்த சுமார் 10 பேரை அதிகாரிகள் பிடித்தனர். பின்னர் அதிகாரிகள் ஆம்புலன்சை வரவழைவத்து கொரோனா நோயாளிகளை ஏற்றுவது போல் ஆம்புலன்சில் ஏற்றினர். பின்னர் அவர்களுக்கு கட்டாய கொரோனா பரிசோதனை செய்யப்பட்டது.
அவர்களை அதிகாரிகள் ஆம்புலன்சில் ஏற்றுவதை பார்த்து அந்த வழியாக வந்தவர்கள் அலறியடித்து வீடுகளுக்குள் ஓடினர். இந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது.
Related Tags :
Next Story