தேவையின்றி வெளியே சுற்றித்திரிந்தவர்களிடம் இருந்து 150 இருசக்கர வாகனங்கள் பறிமுதல்
தேவையின்றி வெளியே சுற்றித்திரிந்தவர்களிடம் இருந்து 150 இருசக்கர வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டன.
கீழப்பழுவூர்:
கொரோனா தொற்று பரவலை கட்டுப்படுத்த முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டு, அத்தியாவசிய தேவையின்றி வீட்டை விட்டு பொதுமக்கள் வெளியே வரவேண்டாம் என்று அரசால் அறிவுறுத்தப்பட்டுள்ளது. இந்நிலையில் தேவையில்லாமல் வெளியே சுற்றித்திரிவோர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அரியலூர் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு பாஸ்கரன் அறிவுறுத்தியுள்ளார். இதைத்தொடர்ந்து கீழப்பழுவூர் மற்றும் திருமானூர் ஆகிய போலீஸ் நிலையங்களின் எல்லைக்கு உட்பட்ட பகுதிகளில் தேவையின்றி இருசக்கர வாகனங்களில் சுற்றித்திரிந்தவர்களின் வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டு வருகிறது. இதுவரை திருமானூரில் 50-க்கும் மேற்பட்ட இருசக்கர வாகனங்களும், கீழப்பழுவூரில் 100-க்கும் மேற்பட்ட இருசக்கர வாகனங்களும் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. அவை தற்போது போலீஸ் நிலைய வளாகத்தில் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளன.
Related Tags :
Next Story