பணம் வைத்து சூதாடிய 3 பேர் கைது


பணம் வைத்து சூதாடிய 3 பேர் கைது
x
தினத்தந்தி 28 May 2021 1:02 AM IST (Updated: 28 May 2021 1:02 AM IST)
t-max-icont-min-icon

பணம் வைத்து சூதாடிய 3 பேரை போலீசார் கைது செய்தனர்.


மணப்பாறை, 
மணப்பாறையை அடுத்த திருமலையான்பட்டி பகுதியில் சிலர் சீட்டு விளையாடிக் கொண்டிருப்பதாக மணப்பாறை போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. அதன் பேரில் போலீசார் அங்கு சென்று பார்த்தனர். அப்போது 3 பேர் சீட்டு விளையாடிக் கொண்டிருப்பது தெரியவந்தது. இதையடுத்து அவர்களை பிடித்து போலீசார் விசாரித்தனர். விசாரணையில் அவர்கள் அதே பகுதியை சேர்ந்த அழகர்சாமி (வயது 34), அப்புக்குட்டி(26), அய்யப்பன் (30) என்பது தெரியவந்தது. இதைத்தொடர்ந்து 3 பேரையும் கைது செய்த போலீசார் அவர்களிடம் இருந்து ரூ.300 மற்றும் 3 இருசக்கர வாகனங்களை பறிமுதல் செய்தனர்.

Next Story