திருச்சி மாநகராட்சி சார்பில் ஒரே நாளில் 4,893 பேருக்கு கொரோனா தடுப்பூசி


திருச்சி மாநகராட்சி சார்பில் ஒரே நாளில் 4,893 பேருக்கு கொரோனா தடுப்பூசி
x
தினத்தந்தி 28 May 2021 1:03 AM IST (Updated: 28 May 2021 1:03 AM IST)
t-max-icont-min-icon

திருச்சி மாநகராட்சி சார்பில் ஒரே நாளில் 4,893 பேருக்கு கொரோனா தடுப்பூசி போடப்பட்டுள்ளது.

திருச்சி, 
திருச்சி மாநகராட்சி சார்பில் கடந்த சில நாட்களாக 5 இடங்களில் சிறப்பு முகாம் அமைத்து 18 வயது முதல் 44 வயதுக்குட்பட்டவர்களுக்கு கொரோனா தடுப்பூசி செலுத்தும் பணி, ஆணையர் சிவசுப்பிரமணியன் உத்தரவின்பேரில் நடந்து வருகிறது. குறிப்பாக பத்திரிகையாளர்கள், பால் வினியோகிப்பாளர்கள், தெரு காய்கறி வியாபாரிகள், ஆட்டோ, பஸ் ஓட் டுனர்கள் மற்றும் அரசுத்துறையை சார்ந்தவர்களுக்கு தற்போது தடுப்பூசி செலுத்தப்பட்டு வருகிறது. இந்த நிலையில் நேற்றும் தேவர் ஹால், ஸ்ரீரங்கம், பொன்மலை, கோ- அபிஷேகம்புரம் மற்றும் அரியமங்கலம் கோட்ட அலுவலகங்களில் சிறப்பு முகாம் அமைத்து காலை 8 மணி முதல் பிற்பகல் 3 மணிவரை 18 வயதில் இருந்து 44 வயதுக்குட்பட்டவர்களுக்கு கொரோனா தடுப்பூசி போடப்பட்டது. ஒரே நாளில் மொத்தம் 3,746 பேருக்கு தடுப்பூசி செலுத்தப்பட்டது. இதுதவிர நகர்ப்புற ஆரம்ப சுகாதார நிலையம் மூலம் 45 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு நேற்று மட்டும் 1,147 பேருக்கு தடுப்பூசி போடப்பட்டுள்ளதாக மாநகராட்சி தரப்பில் தெரிவிக்கப்பட்டது.

Next Story