வளநாடு அருகே 200 லிட்டர் சாராய ஊறல் அழிப்பு; பெண் உள்பட 4 பேருக்கு வலைவீச்சு


வளநாடு அருகே 200 லிட்டர் சாராய ஊறல் அழிப்பு; பெண் உள்பட 4 பேருக்கு வலைவீச்சு
x
தினத்தந்தி 28 May 2021 1:03 AM IST (Updated: 28 May 2021 1:03 AM IST)
t-max-icont-min-icon

வளநாடு அருகே 200 லிட்டர் சாராய ஊறலை போலீசார் கண்டுபிடித்து அழித்தனர். இதுதொடர்பாக பெண் உள்பட 4 பேரை போலீசார் வலைவீசி தேடி வருகிறார்கள்.

துவரங்குறிச்சி, 
வளநாடு அருகே 200 லிட்டர் சாராய ஊறலை போலீசார்  கண்டுபிடித்து அழித்தனர். இதுதொடர்பாக பெண் உள்பட 4 பேரை போலீசார் வலைவீசி தேடி வருகிறார்கள்.

சாராயம் விற்பனை

கொரோனா பரவல் அதிகரித்து வரும் நிலையில் அரசு முழு ஊரடங்கு பிறப்பித்துள்ளது. இதனால் டாஸ்மாக் கடைகள் கடந்த 10-ந்தேதி முதல் அடைக்கப்பட்டுள்ளன. இதனால் மதுப்பிரியர்கள் மதுபானம் கிடைக்காமல் அவதி அடைந்து வருகிறார்கள்.

இதை பயன்படுத்தி சிலா் சாராயம் காய்ச்சி விற்க தொடங்கி உள்ளனர். குறிப்பாக கிராமப்புறங்களை ஒட்டி உள்ள தோட்டத்து பகுதிகளில் சாராய ஊறல் போடும் சம்பவம் அரங்கேறி வருகிறது. நேற்று முன்தினம் திருச்சி மாநகரில் வீட்டிலேயே சாராயம் காய்ச்சிய 2 பெண்களை மதுவிலக்கு போலீசார் கைது செய்தனர்.

சாராய ஊறல் அழிப்பு

இந்நிலையில் திருச்சி மாவட்டம் வளநாட்டை அடுத்த வெள்ளியங்குடி பட்டியை சேர்ந்த லட்சுமி என்பவரின் தோட்டத்தில் சாராய ஊறல் போட்டு இருப்பதாக வளநாடு போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. அதன்பேரில் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று சோதனை நடத்தினர்.
அப்போது, அங்கு ஒரு பேரலில் மண்ணிற்கு அடியில் புதைத்து வைக்கப்பட்ட நிலையில் சுமார் 100 லிட்டர் சாராய ஊறல் இருந்தது. உடனே போலீசார் அவற்றை கைப்பற்றி தரையில் ஊற்றி அழித்தனர். 

இதுபோல் அதே பகுதியில் ராஜேந்திரன், அவருடைய உறவனர் சண்முகம் மற்றும் கனகராஜ் தோட்டங்களில் 100 லிட்டர் சாராய ஊறலை கண்டுபிடிக்கப்பட்டு அழிக்கப்பட்டது. மேலும் இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து லட்சுமி, ராஜேந்திரன், சண்முகம், கனகராஜ் ஆகியோரை தேடி வருகிறார்கள்.

Next Story