தடுப்பூசி போடுவதற்கு ஆர்வமாக குடும்பத்துடன் வரும் மக்கள்
தஞ்சை மாவட்டத்தில் தற்போது தினமும் 117 மையங்களில் தடுப்பூசி போடப்பட்டு வருகிறது. தற்போது மக்களிடமும் தடுப்பூசி குறித்து ஆர்வம் அதிகரித்துள்ளதால் குடும்பத்துடன் வந்து தடுப்பூசி போடுவதை காண முடிகிறது. நேற்று ஒரே நாளில் 10 ஆயிரத்து 330 பேருக்கு தடுப்பூசி போடப்பட்டது.
தஞ்சாவூர்:
தஞ்சை மாவட்டத்தில் தற்போது தினமும் 117 மையங்களில் தடுப்பூசி போடப்பட்டு வருகிறது. தற்போது மக்களிடமும் தடுப்பூசி குறித்து ஆர்வம் அதிகரித்துள்ளதால் குடும்பத்துடன் வந்து தடுப்பூசி போடுவதை காண முடிகிறது. நேற்று ஒரே நாளில் 10 ஆயிரத்து 330 பேருக்கு தடுப்பூசி போடப்பட்டது.
கொரோனா இரண்டாவது அலை
தஞ்சை மாவட்டத்தில் கொரோனா நோய்த் தொற்று இரண்டாவது அலை வேகமாகப் பரவி வரும் நிலையில், தடுப்பூசி போட்டுக்கொள்வதில் பொதுமக்கள் முன்னைக் காட்டிலும் தற்போது அதிக ஆர்வம் காட்டி வருகின்றனர். அதிலும் குறிப்பாக, பெண்களை விட அதிக ஆண்கள் தடுப்பூசி போட்டுக் கொண்டுள்ளனர்.
தஞ்சை மாவட்டத்தில் அரசு மருத்துவமனைகள், ஆரம்ப சுகாதார நிலையங்கள் மற்றும் சிறப்பு முகாம்களில் இந்த தடுப்பூசி போடப்பட்டு வருகிறது. இதுதவிர தடுப்பூசி போடுவதற்காக தனியாக மையங்கள் ஏற்படுத்தப்பட்டு தடுப்பூசி போடப்பட்டு வருகிறது. தற்போது 18 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கும் தடுப்பூசிகள் போடப்பட்டு வருகிறது.
117 மையங்களில் தடுப்பூசி
தஞ்சை மாவட்டத்தில் 117 மையங்களில் தடுப்பூசி போடப்பட்டு வருகிறது. நேற்று முன்தினம் ஒரே நாளில் 10,587 பேர் தடுப்பூசி போட்டுக் கொண்டனர். நேற்று 10,330 தடுப்பூசி போட்டுக் கொண்டனர். தடுப்பூசி போட்டுக் கொள்வதில் ஆரம்பக் கட்டத்தில் பொதுமக்களிடையே ஒரு தயக்கம், அவநம்பிக்கை இருந்து வந்தது.
ஆனால், தற்போது ஆண்களும் பெண்களும் தன்னார்வத்துடன் வந்து வரிசையில் நின்று காத்திருந்து தடுப்பூசி போட்டு வருகின்றனர். இதுதவிர குடும்பத்துடன் வந்து தடுப்பூசி போடுவதே பல்வேறு இடங்களில் காணமுடிகிறது. கிராமப்பகுதிகளில் வரத்து அதிகரிக்க தொடங்கியதையடுத்து ஊராட்சிகளிலும் தடுப்பூசி போடுதல் மக்கள் அதிக ஆர்வம் காட்டி வருகிறார்கள்.
குடும்பத்துடன் வரும் மக்கள்
தஞ்சை மருத்துவக்கல்லூரி சாலையில் உள்ள ஒரு திருமண மண்டபத்தில் நீலகிரி ஊராட்சி பகுதியை சேர்ந்த பொதுமக்களுக்காக தடுப்பூசி போடும் பணி நேற்று நடைபெற்றது. இதில் ஏராளமான இளம் பெண்கள் தங்களது தாய், தந்தையுடன் வந்து தடுப்பூசி போட்டனர். இதேபோல் 18 வயதுக்கு மேற்பட்டவர்களும் தங்களது பெற்றோர் மற்றும் நண்பர்களுடன் வந்து தடுப்பூசியை போட்டனர். இந்த தடுப்பூசி முகாமை தாசில்தார் பாலசுப்பிரமணியன் மற்றும் நீலகிரி ஊராட்சி மன்ற தலைவி வள்ளியம்மை பாஸ்கரன் ஆகியோர் தொடங்கி வைத்தனர்.
இதே போல் மாவட்டத்தில் பல பகுதிகளில் தற்போது 18 வயதுக்கு மேற்பட்டவர்கள் குடும்பத்துடன் வந்து தடுப்பூசி போடுவதை காண முடிகிறது. பல இடங்களில் நேற்று இளம்பெண்கள் தங்களது பெற்றோருடன் வந்தும் தடுப்பூசி போட்டதை காண முடிந்தது.
போலீசார் குடும்பத்தினர்
தஞ்சை மாவட்டத்தில் பெருகி வரும் கொரோனா தொற்றை கட்டுப்படுத்தும் பொருட்டு முன்கள பணியாளர்களாக பணியாற்றி வரும் காவல் துறையினரின் குடும்பத்தினருக்கு கொரோனா தொற்று பரவாமல் தடுக்க தஞ்சாவூர் மாவட்டத்தில் பணிபுரியும் காவல் துறையினரின் குடும்ப உறுப்பினர்களுக்கு கொரோனா தடுப்பூசி சிறப்பு முகாம் நடத்தப்பட்டது. மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு தேஷ்முக் சேகர் சஞ்சய், உத்தரவின் பேரில் தஞ்சாவூர் ஆயுதப்படை வளாகத்தில் நடந்த முகாமில் காவலர்களின் குடும்பத்தினர் 18 வயதிற்கு மேற்பட்டவர்கள் பலர் முக கவசம் அணிந்தும், சமூக இடைவெளியை பின்பற்றியும் கலந்துகொண்டு தடுப்பூசி போட்டுக்கொண்டனர்.
Related Tags :
Next Story