அன்னவாசல் பகுதியில் பணம் வைத்து சூதாடிய 8 பேர் கைது


அன்னவாசல் பகுதியில் பணம் வைத்து சூதாடிய 8 பேர் கைது
x
தினத்தந்தி 28 May 2021 1:29 AM IST (Updated: 28 May 2021 1:29 AM IST)
t-max-icont-min-icon

அன்னவாசல் பகுதியில் பணம் வைத்து சூதாடிய 8 பேர் கைது செய்யப்பட்டனர்

அன்னவாசல்
அன்னவாசல் கடம்பராயன்பட்டி ஒத்தக்கடை கடையன்குளத்தில் பணம் வைத்து சிலர் சூதாடுவதாக அன்னவாசல் போலீசாருக்கு தகவல் கிடைத்தது. அதன்பேரில், போலீசார் சம்பந்தப்பட்ட பகுதிக்கு விரைந்து சென்றனர். அப்போது அங்கு பணம் வைத்து சூதாடிய சுப்பையா (வயது 42), சுப்பிரமணி (46), சாமிதுரை (34), வீரப்பன் (40), முருகேசன் (39), மலைச்சாமி (27), முத்துக்குமார், (43), ராஜ்குமார் (52) ஆகிய 8 பேரை போலீசார் கைது செய்தனர். அவர்களிடம் இருந்து ரூ.1 லட்சத்து 71 ஆயிரத்து 320 மற்றும் 7 மோட்டார் சைக்கிள்கள், 5 செல்போன்கள் ஆகியவை பறிமுதல் செய்யப்பட்டன. இதுகுறித்து அறிந்த மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு பாலாஜி சரவணன் அன்னவாசல் போலீசாருக்கு பாராட்டு தெரிவித்தார்.


Next Story