சாராயம் காய்ச்சிய 4 போ் கைது
கந்தர்வகோட்டை அருகே சாராயம் காய்ச்சிய 4 போ் கைது செய்யப்பட்டனர்
கந்தர்வகோட்டை
கந்தர்வகோட்டை அருகே உள்ள கல்லுப்பட்டி மற்றும் முள்ளிக்காய்பட்டி ஆகிய பகுதிகளில் சாராயம் காய்ச்சப்படுவதாக கிடைத்த தகவலின்பேரில் கந்தர்வகோட்டை சப்-இன்ஸ்பெக்டர் சுந்தரமூர்த்தி தலைமையிலான போலீசார் அந்த பகுதிகளுக்கு விரைந்து சென்றனர். அப்போது கல்லுப்பட்டி மூக்கையன்குட்டை அருகே 7 பர் சாராயம் காய்ச்சிக் கொண்டிருந்தனர். போலீசாரை கண்டதும் 5 பேர் தப்பி ஓடி விட்டனர். கல்லுப்பட்டியை சேர்ந்த தங்கமுத்து (வயது 35), கலியராஜ் (45) ஆகிய 2 பேரை போலீசார் கைது செய்தனர். அவர்களிடம் இருந்து 10 லிட்டர் சாராயம் மற்றும் சாராயம் காய்ச்ச பயன்படுத்தப்பட்ட பொருட்கள் ஆகியன பறிமுதல் செய்யப்பட்டன. தப்பி ஓடிய 5 பேரையும் போலீசார் தேடி வருகின்றனர். இதேபோல, முள்ளிக்காய்பட்டி கிராமத்தைச் சேர்ந்த மோகன்தாஸ் (31), முத்துக்குமார் (45) ஆகியோர் சாராயம் காய்ச்சி கொண்டிருந்தபோது பிடிபட்டனர். அவர்களிடம் இருந்து 5 லிட்டர் சாராயம் பறிமுதல் செய்யப்பட்டது.

Related Tags :
Next Story