ரேஷன் கடையில் இருந்து கடத்த முயன்ற அரிசி பறிமுதல்


ரேஷன் கடையில் இருந்து கடத்த முயன்ற அரிசி பறிமுதல்
x
தினத்தந்தி 28 May 2021 1:48 AM IST (Updated: 28 May 2021 1:48 AM IST)
t-max-icont-min-icon

ரேஷன் கடையில் இருந்து கடத்த முயன்ற ரேஷன் அரிசி பறிமுதல் செய்யப்பட்டது

மணமேல்குடி
மணமேல்குடியை அடுத்த அம்மாப்பட்டினம் ரேஷன் கடையிலிருந்து அரிசி கடத்தப்படுவதாக கிடைத்த தகவலின்பேரில் மணமேல்குடி தாசில்தார் ஜமுனா, வருவாய் ஆய்வாளர் அருள்செல்வம் மற்றும் அதிகாரிகள் சம்பந்தப்பட்ட ரேஷன் கடைக்கு சென்று ஆய்வு மேற்கொண்டனர். அப்போது ஒரு சரக்கு வேனில் 1,500 கிலோ ரேஷன் அரிசி கடத்த முயன்றது தெரிய வந்தது. பின்னர், அந்த ரேஷன் அரிசி மூட்டைகள், சரக்கு வேன் ஆகியவற்றை பறிமுதல் செய்து குடிமைப்பொருள் குற்ற புலனாய்வு துறை அதிகாரிகளிடம் ஒப்படைத்தனர். ரேஷன் அரிசி கடத்த உறுதுணையாக இருந்த விற்பனையாளர் மீது துறை ரீதியான நடவடிக்கை எடுக்க தாசில்தார் ஜமுனா உத்தரவிட்டார்.



Next Story