ஈரோடு மாவட்டத்தில் புதிதாக 1,699 பேருக்கு தொற்று: 2 வாலிபர்கள் உள்பட 11 பேர் கொரோனாவுக்கு பலி; மொத்த பாதிப்பு 50 ஆயிரத்தை நெருங்கியது


ஈரோடு மாவட்டத்தில் புதிதாக 1,699 பேருக்கு தொற்று: 2 வாலிபர்கள் உள்பட  11 பேர் கொரோனாவுக்கு பலி; மொத்த பாதிப்பு 50 ஆயிரத்தை நெருங்கியது
x
தினத்தந்தி 28 May 2021 1:56 AM IST (Updated: 28 May 2021 1:56 AM IST)
t-max-icont-min-icon

ஈரோடு மாவட்டத்தில் புதிதாக 1,699 பேருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளதோடு 2 வாலிபர்கள் உள்பட 11 பேர் இறந்துள்ளனர். மேலும் மொத்த பாதிப்பு 50 ஆயிரத்தை நெருங்கி உள்ளது.

ஈரோடு
ஈரோடு மாவட்டத்தில் புதிதாக 1,699 பேருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளதோடு 2 வாலிபர்கள் உள்பட 11 பேர் இறந்துள்ளனர். மேலும் மொத்த பாதிப்பு 50 ஆயிரத்தை நெருங்கி உள்ளது.
1,699 பேருக்கு கொரோனா
ஈரோடு மாவட்டத்தில் கொரோனா வைரசின் 2-வது அலை மிகவும் வேகமாக பரவி வருகிறது. குறிப்பாக மாநகர் பகுதியில் அதிகமானோர் தொற்றினால் பாதிக்கப்பட்டு உள்ளனர்.
இந்த நிலையில் நேற்று சுகாதாரத்துறை சார்பில் வெளியிடப்பட்டுள்ள பட்டியலின்படி, ஈரோடு மாவட்டத்தில் 1,699 பேர் புதிதாக கொரோனாவால் பாதிக்கப்பட்டு உள்ளனர். இவர்களில் சிலர் வீட்டு தனிமையிலும், சிலர் மருத்துவமனைகளில் சிகிச்சைக்காகவும் அனுமதிக்கப்பட்டு உள்ளனர். இதனால் மாவட்டத்தில் மொத்த பாதிப்பு 49 ஆயிரத்து 685 ஆக உயர்ந்தது.
11 பேர் சாவு
இதற்கிடையில் ஈரோட்டைச் சேர்ந்த 70 வயது மூதாட்டி காய்ச்சல் மற்றும் சளி தொல்லை காரணமாக கடந்த மாதம் 30-ந் தேதி ஈரோடு அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார். அவருக்கு பரிசோதனை செய்தபோது கொரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டது. அதைத்தொடர்ந்து டாக்டர்கள் அவருக்கு தீவிர சிகிச்சை அளித்து வந்தனர். இந்த நிலையில் கடந்த 4-ந்தேதி சிகிச்சை பலனின்றி மூதாட்டி இறந்தார்.
இதேபோல் ஈரோடு அரசு ஆஸ்பத்திரியில் கொரோனாவுக்காக சிகிச்சை பெற்று வந்த 65 வயது ஆண் கடந்த 7-ந்தேதியும், 65 வயது பெண் கடந்த 13-ந் தேதியும், கோவையில் ஒரு தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த 35 வயது வாலிபர் கடந்த 23-ந் தேதியும் இறந்தனர்.
மேலும் சேலம் மாவட்டத்தில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த 60 வயது பெண், பவானியில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த 47 வயது ஆண், பெருந்துறை அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த 44 வயது ஆண் ஆகியோர் கடந்த 25-ந்தேதியும், கோவையில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த 58 வயது பெண், ஈரோட்டில் உள்ள தனியார் மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வந்த 65 வயது பெண், 45 வயது ஆண் ஆகியோர் நேற்று முன்தினமும், கோவையில் உள்ள ஒரு தனியார் மருத்துவனையில் சிகிச்சை பெற்று வந்த 30 வயது வாலிபர் நேற்றும் இறந்தனர். ஈரோடு மாவட்டத்தில் இதுவரை கொரோனாவுக்கு 290 பேர் பலியாகி உள்ளனர்.
1,146 பேர் வீடு திரும்பினர்
அதேநேரம் பல்வேறு மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வந்த 1,146 பேர் நேற்று குணமடைந்து வீடு திரும்பினர். மாவட்டத்தில் இதுவரை மொத்தம் 35 ஆயிரத்து 879 பேர் கொரோனா வைரசில் இருந்து மீண்டு உள்ளனர்.
இதேபோல் சிகிச்சை பெறுபவர்களின் எண்ணிக்கையும் நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே செல்கிறது. தற்போது மாவட்டம் முழுவதும் 13 ஆயிரத்து 516 பேர் பல்வேறு மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகிறார்கள். முழு ஊரடங்கு அமலில் இருந்த போதும் கொரோனா வைரஸ் பரவல் குறைந்தபாடில்லை. மாவட்டத்தில் கொரோனா பாதிப்பு 50 ஆயிரத்தை நெருங்கி உள்ளதால் பொதுமக்கள் மிகுந்த அச்சத்தில் உள்ளனர்.

Next Story