கொரோனாவுக்கு மின்வாரிய அதிகாரி உள்பட 2 பேர் பலி
கீரமங்கலம் பகுதியில் கொரோனாவுக்கு மின்வாரிய அதிகாரி உள்பட 2 பேர் உயிரிழந்தனர்
கீரமங்கலம்
புதுக்கோட்டை மாவட்டம், கீரமங்கலம் அருகே உள்ள கொத்தமங்கலம் பகுதியை சேர்ந்த மின்வாரிய அதிகாரி ஒருவர் கடந்த சில நாட்களாக காய்ச்சலால் பாதிக்கப்பட்டார். இதற்காக உள்ளூரில் சிகிச்சை பெற்ற அவர் பின்னர் புதுக்கோட்டையில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்ந்தார். அங்கு அவருக்கு மருத்துவ பரிசோதனை மேற்கொள்ளப்பட்டதில் அவருக்கு கொரோனா தொற்று இருப்பது தெரிய வந்தது. அவருக்கு தொடர்ந்து சிகிச்சை அளிக்கப்பட்டு வந்த நிலையில் திடீரென உடல்நிலை மேலும் பாதிக்கப்பட்டது. பின்னர், புதுக்கோட்டை அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சை பெற்ற அவர் அங்கு சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.
இதேபோல, கீரமங்கலம் அருகே உள்ள மேற்பனைக்காடு கிழக்கு ஆண்டாங்கோட்டை கிராமத்தை சேர்ந்த தபால் நிலைய அலுவலரின் தந்தை கடந்த 15 நாட்களுக்கு முன்பு உடல்நலமின்றி உயிரிழந்தார். அவரது உடலை அடக்கம் செய்ய யாரும் முன் வராத நிலையில் தன்னார்வலர்கள் அடக்கம் செய்தனர்.
அடுத்த சில நாட்களில் தபால் நிலைய ஊழியருக்கு காய்ச்சல் ஏற்பட்டு தஞ்சாவூரில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டார். அங்கு அவருக்கு பரிசோதனை மேற்காண்டதில் கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டதாக தெரிகிறது. இந்தநிலையில் சிகிச்சை பலனின்றி அவரும் பரிதாபமாக உயிரிழந்தார். அவரது குடும்பத்தில் மேலும் சிலருக்கு உடல்நலம் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.

Related Tags :
Next Story