இரும்பாலை கொரோனா சிகிச்சை மையத்தில் குப்பைகளை அகற்றிய அதிகாரி
குப்பைகளை அகற்றிய அதிகாரி
ஆட்டையாம்பட்டி:
வீரபாண்டி ஊராட்சி ஒன்றியத்துக்குட்பட்ட பகுதியில் உள்ள இரும்பாலையில் கொரோனா சிகிச்சை மையம் அமைக்கும் பணி முழுவீச்சில் நடைபெற்று வருகிறது. அங்கு விரைவில் நோயாளிகளுக்கு சிகிச்சை அளிக்கப்பட உள்ளது. மேலும் சிகிச்சை மையம் அமைக்கும் பணியை அடிக்கடி உயர் அதிகாரிகள் பார்வையிட்டு ஆய்வு நடத்தி வருகிறார்கள். இந்த நிலையில் நேற்று வீரபாண்டி ஊராட்சி ஒன்றிய ஆணையாளர் ராஜ கணேஷ் மற்றும் ஊராட்சி செயலாளர்கள் இரும்பாலை கொரோனா சிகிச்சை மையத்தில் நடைபெற்று வரும் பணியை பார்வையிட்டு ஆய்வு நடத்தினார்கள். அப்போது அங்கு தேங்கி கிடந்த குப்பைகளை ஊராட்சி ஒன்றிய ஆணையாளர் ராஜகணேஷ் அகற்றி அப்புறப்படுத்தினார்.
Related Tags :
Next Story