முழு ஊரடங்கால் வாழ்வாதாரம் பாதிப்பு: சுமை தூக்கும் தொழிலாளர்களுக்கு உணவுப்பொருட்கள்; சென்னை ரெயில்வே கோட்டம் சார்பில் வழங்கப்பட்டது.
சுமை தூக்கும் தொழிலாளர்கள் (போர்ட்டர்), ஒப்பந்த ஊழியர்கள், தூய்மை பணியாளர்கள் பலர் ரெயில்வே துறையை நம்பி தங்களது பிழைப்பை நடத்தி வருகின்றனர்.
இந்தநிலையில், கொரோனா ஊரடங்கால் வருமானமின்றி வாழ்வாதாரம் பாதித்த 80 சுமை தூக்கும் தொழிலாளார்கள் உள்பட ரெயில்வேயை நம்பி பிழைப்பு நடத்தும் 300 ஊழியர்களுக்கு தெற்கு ரெயில்வே சென்னை கோட்டம் சார்பில், எம்.ஜி.ஆர் சென்டிரல் ரெயில் நிலையத்தில் வைத்து இலவசமாக உணவு பொருட்கள் வழங்கப்பட்டது.
இதில், அரிசி, பருப்பு, மைதா, ரவை, சர்க்கரை, சமையல் எண்ணெய், கோதுமை மற்றும் அத்தியாவசிய பொருட்கள் அடங்கும். மேலும், தன்னார்வலர்கள் மூலம், கடந்த 14-ந்தேதி முதல் சென்டிரல் ரெயில் நிலையத்திலும், 18-ந்தேதி முதல் எழும்பூர் ரெயில் நிலையத்திலும் உணவு பொட்டலங்கள் வழங்கப்பட்டு வருகிறது.அந்த வகையில் இதுவரை 15 ஆயிரத்து 600 பேருக்கு இலவச உணவு
பொட்டலங்கள் வழங்கப்பட்டுள்ளது.
Related Tags :
Next Story