3-வது கொரோனா அலை அபாயம் குழந்தைகள் மருத்துவ நிபுணர்கள் பணி குழு: மந்திரி ராஜேஷ் தோபே தகவல்


3-வது கொரோனா அலை அபாயம் குழந்தைகள் மருத்துவ நிபுணர்கள் பணி குழு: மந்திரி ராஜேஷ் தோபே தகவல்
x
தினத்தந்தி 28 May 2021 6:58 AM IST (Updated: 28 May 2021 6:58 AM IST)
t-max-icont-min-icon

3-வது கொரோனா அலை அபாயம் இருப்பதால் அதை எதிர்கொள்ள குழந்தைகள் மருத்துவ நிபுணர்கள் அடங்கிய பணிகுழு அமைக்கப்பட உள்ளதாக மந்திரி ராஜேஷ் தோபே கூறியுள்ளார்.

குழந்தைகள் மருத்துவ நிபுணர்கள் குழு

மராட்டியத்தில் 2-வது கொரோனா அலை கடந்த மாதம் உச்சத்தில் இருந்தது. தற்போது பாதிப்பு குறைந்து வருகிறது. இந்தநிலையில் 3-வது கொரோனா அலைக்கு வாய்ப்பு இருப்பதாகவும், அது குழந்தைகளை அதிகளவில் தாக்கும் எனவும் வல்லுநர்கள் எச்சரித்து வருகின்றனர்.இந்தநிலையில் 3-வது அலையை எதிர்கொள்ள வசதியாக குழந்தைகள் மருத்துவ நிபுணர்கள் அடங்கிய பணிக்குழு அமைக்கப்படும் என சுகாதாரத்துறை மந்திரி ராஜேஷ் தோபே கூறியுள்ளார்.

உத்தரவு வெளியீடு

இதுகுறித்து அவர் கூறுகையில், ‘‘3-வது அலையை எதிர்கொள்ள வசதியாகவும், முன்எச்சரிக்கை நடவடிக்கைகளை எடுக்கவும் நிபுணர்கள் குழுவை அமைக்க முதல்-மந்திரி உத்தவ் தாக்கரே சுகாதார துறைக்கு உத்தரவிட்டுள்ளார். இதையடுத்து 13 நிபுணர்கள் அடங்கிய குழந்தைகள் நல பணிக்குழு அமைக்கப்படுகிறது. குழந்தைகள் நல மருத்துவர் சுகாஸ் பிரபு இந்த குழுவின் தலைவராக இருப்பார். மருத்துவ கல்வி மற்றும் ஆராய்ச்சி இயக்குனரக இயக்குனர் தத்யாராவ் லகானே உறுப்பினர் செயலாளராக இருப்பார்’’ என்றார்.

மேலும் இதுகுறித்த உத்தரவையும் நேற்று அரசு வெளியிட்டுள்ளது.


Next Story