செங்கல்பட்டு மாவட்டத்தில் கொரோனா தொற்றால் ஒரே நாளில் 52 பேர் உயிரிழப்பு
செங்கல்பட்டு மாவட்டத்தில் கொரோனா தொற்றால் ஒரே நாளில் 52 பேர் உயிரிழந்தனர்.
52 பேர் உயிரிழந்தனர்
செங்கல்பட்டு மாவட்டத்தில் நேற்று 1,392 பேர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டனர். மாவட்டம் முழுவதும் இதுவரை பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 1 லட்சத்து 35 ஆயிரத்து 289-ஆக உயர்ந்துள்ளது. இவர்களில் 1 லட்சத்து 18 ஆயிரத்து 762 பேர் சிகிச்சை பெற்று வீடு திரும்பினர். நேற்று சிகிச்சை பலனின்றி ஒரே நாளில் 52 பேர் உயிரிழந்தனர். இதனால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 1,669- ஆக உயர்ந்தது. 14 ஆயிரத்து 858 பேர் ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
காஞ்சீபுரம்காஞ்சீபுரம் மாவட்டத்தில் நேற்று 751 பேர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டனர். மாவட்டம் முழுவதும் இதுவரை பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 60 ஆயிரத்து 789-ஆக உயர்ந்துள்ளது. இவர்களில் 52 ஆயிரத்து 908 பேர் சிகிச்சை பெற்று வீடு திரும்பினர். நேற்று சிகிச்சை பலனின்றி 20 பேர் உயிரிழந்தனர். இதனால் காஞ்சீபுரம் மாவட்டத்தில் கொரோனா தொற்றால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 891-ஆக உயர்ந்துள்ளது. 6 ஆயிரத்து 990 பேர் ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.