மாமல்லபுரத்தில் கொரோனா தொற்று பகுதிகள் தடுப்புகள் வைத்து அடைப்பு; பேரூராட்சி நடவடிக்கை


மாமல்லபுரத்தில் கொரோனா தொற்று பகுதிகள் தடுப்புகள் வைத்து அடைப்பு; பேரூராட்சி நடவடிக்கை
x
தினத்தந்தி 28 May 2021 10:41 AM IST (Updated: 28 May 2021 10:41 AM IST)
t-max-icont-min-icon

மாமல்லபுரத்தில் கொரோனா தொற்று உள்ள பகுதிகள் தடை செய்யப்பட்ட பகுதிகளாக அறிவிக்கப்பட்டு தடுப்புகள் வைக்கப்பட்டு அந்த சாலைகள் அடைக்கப்பட்டன.

கொரோனா தொற்று

செங்கல்பட்டு மாவட்டம் மாமல்லபுரத்தில் உள்ள ஒத்தவாடை தெரு, கங்கை கொண்டான் மண்டபம் தெரு, மேற்கு ராஜ வீதி உள்ளிட்ட சில தெருக்களில் கொரோனா தொற்றுக்கு உள்ளானவர்கள் தாங்களாகவே தனிமைபடுத்தி சிகிச்சை பெற்று வருகின்றனர். இந்த நிலையில் இந்த குறிப்பிட்ட தெருக்களில் மேலும் கொரோனா தொற்று பரவாமல் இருக்க மாமல்லபுரம் பேரூராட்சி நிர்வாகம் இந்த குறிப்பிட்ட தெருக்களில் தடுப்புகள் அமைத்து போக்குவரத்துக்கு தடை விதித்துள்ளது. கொரோனா தொற்று உள்ள குறிப்பிட்ட தெருக்களில் தினமும் பேரூராட்சி நிர்வாகம் சார்பில் கிருமி நாசினி தெளிக்கப்படுகிறது.

ஆக்ஸிஜன் அளவு

அதேபோல் மாமல்லபுரம் பேரூராட்சி செயல் அலுவலர் கணேசன், துப்புரவு ஆய்வாளர் ரகுபதி ஆகியோர் தலைமையில் கொரோனா தொற்று உள்ள தெருக்களில் பேரூராட்சி சுகாதார பணியாளர்கள் வீடு, வீடாக சென்று அங்கு வசிக்கும் மக்களிடம் தெர்மல் மீட்டர், ஆக்ஸிஜன் மீட்டர் கருவி உதவியுடன் உடல் வெப்ப நிலை, உடலில் ஆக்ஸிஜன் அளவு எவ்வளவு உள்ளது என பரிசோதனை செய்து வருகின்றனர். அப்படி உடல் வெப்ப நிலை அதிகம் உள்ளவர்கள், ஆக்சிஜன் அளவு குறைவாக உள்ள நபர்கள் கொரோனா பரிசோதனை மேற்கொள்ள அறிவுறுத்தப்பட்டு வருகின்றனர். மேலும் மாமல்லபுரம் பேரூராட்சியில் வசிக்கும் மக்கள் அங்கு நடைபெறும் முகாம்களில் கொரோனா தடுப்பூசி போட்டு கொள்ளவும் சுகாதாரத்துறை சார்பில் ஒலிபெருக்கி மூலமும் அறிவுறுத்தப்படுகின்றனர்.


Next Story