இந்தியா முழுவதும் மருந்துகள் அனுப்பி வைப்பு


இந்தியா முழுவதும் மருந்துகள் அனுப்பி வைப்பு
x
தினத்தந்தி 28 May 2021 5:25 PM IST (Updated: 28 May 2021 5:25 PM IST)
t-max-icont-min-icon

இந்தியா முழுவதும் மருந்துகள் அனுப்பி வைப்பு

திருப்பூர்
கொரோனா பாதிப்பின் காரணமாக தமிழகத்தில் முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது. இதன் காரணமாக பொது போக்குவரத்தும் முடக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் திருப்பூரில் இருந்து தினமும் பல பகுதிகளுக்கு லாரிகள் மற்றும் ரெயில்கள் மூலம் முககவசம் மற்றும் மருத்துவ முழுகவச ஆடைகள் உள்ளிட்டவை அனுப்பிவைக்கப்பட்டு வந்தன. இந்த பொதுமுடக்கத்தின் காரணமாக இவை அனுப்புவதில் சிரமம் இருந்தது.
ஆனால் தபால் சேவை தொடர்ந்து இயங்கி வருவதால் இதனை பயன்படுத்த பொதுமக்கள் ஆர்வம் காட்டி வருகிறார்கள். அந்த வகையில் திருப்பூர் ரெயில் நிலையத்தில் உள்ள தபால் நிலையத்தில் இருந்து தினமும் இந்தியாவின் பல்வேறு மாநிலங்களுக்கு மருந்து, முககவசம், ஆடைகள், முழுகவச ஆடைகள் என ஏராளமானவை அனுப்பிவைக்கப்பட்டு வருகின்றன. பொதுமக்களும் தங்கு தடையின்றி தபால் சேவையை பயன்படுத்த முன்வர வேண்டும் என தபால் ஊழியர்கள் தெரிவித்தனர்.

Next Story