தூத்துக்குடியில் 50 ஏழைகளுக்கு போலீஸ் சூப்பிரண்டு ஜெயக்குமார் நிவாரண உதவி


தூத்துக்குடியில் 50 ஏழைகளுக்கு  போலீஸ் சூப்பிரண்டு ஜெயக்குமார் நிவாரண உதவி
x
தினத்தந்தி 28 May 2021 6:05 PM IST (Updated: 28 May 2021 6:05 PM IST)
t-max-icont-min-icon

தூத்துக்குடியில் 50 ஏழைகளுக்கு போலீஸ் சூப்பிரணடு ஜெயக்குமார் நிவாரண உதவி வழங்கினார்

தூத்துக்குடி:
தூத்துக்குடி மாவட்டத்தில் ஏழை, எளிய மக்கள், கொரோனா பாதித்தவர்களுக்கு உதவும் வகையில் புதிய சேவையை போலீஸ் சூப்பிரண்டு ஜெயக்குமார் நேற்று தொடங்கி வைத்தார். இதைத் தொடர்ந்து தூத்துக்குடி மாவட்டத்தை சேர்ந்த 50 பேர் புதிய சேவை மையத்தை தொடர்பு கொண்டனர். அவர்களுக்கு அரிசி, எண்ணெய், பருப்பு உள்ளிட்ட மளிகை பொருட்கள் அடங்கிய தொகுப்புகளை போலீஸ் சூப்பிரண்டு வழங்கினார். அப்போது அவர் கூறுகையில், “மேலும் உதவி தேவைப்படுபவர்கள் தயங்காமல் 95141 44100 என்ற எண்ணுக்கு தகவல் தெரிவிக்கலாம். அவர்களுக்கு தூத்துக்குடி மாவட்ட போலீஸ் துறையினர் வீடு தேடி வந்து உதவி செய்வார்கள்” என்றார்.
தூத்துக்குடி மேல்மருவத்தூர் ஆதிபராசக்தி ஆன்மிக இயக்கம் சார்பில் தூத்துக்குடியில் தினமும் உணவின்றி சிரமப்படும் 500 ஏழை எளிய மக்களுக்கு அன்னதானம் வழங்கப்படுகிறது. தூத்துக்குடி அரசு ஆஸ்பத்திரி முன்பு நேற்று நடந்த அன்னதானம் நிகழ்ச்சியை போலீஸ் சூப்பிரண்டு ஜெயக்குமார் தொடங்கி வைத்தார். தொடர்ந்து ஏழை, எளிய மக்களுக்கு உணவு பார்சல்களை வழங்கினார். நிகழ்ச்சியில் ஆன்மிக இயக்க மாவட்ட தலைவர் முருகன் மற்றும் பொறுப்பாளர்கள் கொண்டனர்.

Next Story