புதர் மண்டி கிடக்கும் குளம்


புதர் மண்டி கிடக்கும் குளம்
x
தினத்தந்தி 28 May 2021 6:35 PM IST (Updated: 28 May 2021 6:35 PM IST)
t-max-icont-min-icon

குமரலிங்கம் அருகே செடி கொடிகளால் ஆக்கிரமிக்கப்பட்டு புதர் மண்டிக் கிடக்கும் குளத்தைத் தூர் வார வேண்டும் என்று விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

போடிப்பட்டி
குமரலிங்கம் அருகே செடி கொடிகளால் ஆக்கிரமிக்கப்பட்டு புதர் மண்டிக் கிடக்கும் குளத்தைத் தூர் வார வேண்டும் என்று விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
மழைநீர் சேமிப்பு
 பூமியின் நான்கில் மூன்று பகுதி நீரால் சூழப்பட்டிருக்கிறது.ஆனால் இதில் பெரும் பகுதி மனிதர்களால் பயன்படுத்த முடியாத உப்பு நீராகவும் கழிவு நீராகவும் உள்ளது.வெறும் 2 சதவீதம் நீர் மட்டுமே மனிதர்கள் மற்றும் விலங்குகளுக்குப் பயன்படக் கூடிய நன்னீராக உள்ளது.இதனால் தான் முன்னோர்கள் நன்னீரான மழைநீரை சேமிப்பதில் அக்கறை காட்டினார்கள்.ஊருணிகள், குளங்கள், ஏரிகள் என பல்வேறு நீர்நிலைகளை உருவாக்கி மழைநீரைச் சேமித்தார்கள்.அத்துடன் நீர் வழித் தடங்களையும் நீராதாரங்களையும் தொடர்ச்சியாகப் பராமரித்து வந்தார்கள்.ஆனால் இன்றைய நிலையில் பல நீர்நிலைகள் ஆக்கிரமிப்புகளால் காணாமல் போய் விட்டன.மிச்சமிருக்கும் நீர்நிலைகளும் பல இடங்களில் பராமரிப்பில்லாமல் தூர்ந்து கிடக்கும் நிலை உள்ளது.
குடிமராமத்து
இந்தநிலையில் நீர்நிலைகள் மேம்பாட்டுக்காக கொண்டு வரப்பட்ட குடிமராமத்துத் திட்டம் பல நீர் நிலைகளின் மேம்பாட்டுக்கு உதவியது.தொடர்ச்சியாக இந்த திட்டத்தில் குறிப்பிட்ட கால இடைவெளியில் அனைத்து ஏரி, குளம் உள்ளிட்ட நீர்நிலைகள் மற்றும் நீர் வழித்தடங்களை தூர் வார நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பது விவசாயிகளின் எதிர்பார்ப்பாக உள்ளது.இல்லாவிட்டால் முந்தைய காலங்களைப் போல குளங்கள் பராமரிப்பை அந்தந்த பகுதி விவசாயிகளிடம் கொடுத்து விடுவதும் அதற்காக ஆண்டுதோறும் நிதி ஒதுக்கி அதிகாரிகள் மேற்பார்வையில் பணிகள் மேற்கொள்வதும் சிறந்ததாக இருக்கும் என்ற கருத்தும் உள்ளது.
அந்தவகையில் குமரலிங்கத்தையடுத்த ஆத்தூர் பகுதியில் உள்ள குளம் பல்வேறு வகையான செடிகள் மற்றும் கொடிகள் வளர்ந்து புதர் போலக் கிடக்கிறது. இதனால் அதிக அளவில் நீர் விரயம் ஏற்படுகிறது. மேலும் அழுகும் செடிகளால் நீர் மாசடைகிறது.அத்துடன் கரைப் பகுதி முழுவதும் புதர்ச் செடிகள் ஆக்கிரமித்திருப்பதால் கால்நடைகள் குடிநீர் அருந்துவதில் சிரமம் ஏற்படுகிறது.இந்த பகுதியைச் சுற்றியுள்ள விவசாய நிலங்களின் நிலத்தடி நீர் மட்டம் உயர்வதற்குக் காரணமாக உள்ள இந்த குளத்திலுள்ள புதர்ச் செடிகளை அகற்றி முறையாக தூர் வார நடவடிக்கை எடுக்க வேண்டும்.
இவ்வாறு  அவர்கள் கூறினர்.

---
குமரலிங்கத்தையடுத்த ஆத்தூர் பகுதியில் புதர் மண்டிக் கிடக்கும் குளத்தைப் படத்தில் காணலாம்.
-------------
Image1 File Name : 4224591.jpg
----
Reporter : T. Subakaran  Location : Tirupur - Udumalaipet - Bodipatti

Next Story