தேனி மாவட்டத்தில் ஒரே நாளில் 4 ஆயிரம் பேருக்கு கொரோனா தடுப்பூசி
தேனி மாவட்டத்தில் ஒரே நாளில் 4 ஆயிரம் பேருக்கு தடுப்பூசி போடப்பட்டு உள்ளது.
தேனி :
கொரோனா என்ற அரக்கனின் கோரப்பசிக்கு தினமும் ஏராளமானவர்கள் பலியாகி வருகின்றனர். இதனால் கொரோனா பரவலை கட்டுப்படுத்தும் வகையில் தடுப்பூசி எப்போது கிடைக்கும் என்ற ஏக்கத்தில் பொதுமக்கள் இருந்தனர். இந்தநிலையில் கொரோனாவை ஒழிக்க கோவேக்சின், கோவிஷீல்டு என்ற 2 தடுப்பூசிகள் இந்தியாவில் கண்டுபிடிக்கப்பட்டது.
தடுப்பூசிகள் அறிமுகம் செய்யப்பட்டபோது மக்கள் மத்தியில் பக்கவிளைவுகள் வருமோ என சந்தேகம் நிலவியது. ஆனால் தடுப்பூசிகளால் எந்தவித பக்கவிளைவுகளும் ஏற்பட வில்லை.
3,947 பேர்
தேனி மாவட்டத்தில் கொரோனா தடுப்பூசி செலுத்தும் பணி ஆரம்பத்தில் மந்தமாக நடந்து வந்தது. இந்தநிலையில் நேற்று முன்தினம் தேனியில் நடந்த ஆய்வுக்கூட்டத்தின் போது தடுப்பூசி செலுத்தும் பணிகளை தீவிரப்படுத்த வேண்டும் என்றும், சிறப்பு முகாம்கள் நடத்த வேண்டும் என்றும் மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன், பொது சுகாதாரத்துறை இயக்குனர் செல்வநாயகம் ஆகியோர் உத்தரவிட்டனர்.
இதையடுத்து தேனி மாவட்டத்தில் நேற்று தடுப்பூசி செலுத்தும் மையங்களின் எண்ணிக்கை 13-ல் இருந்து 15 ஆக உயர்த்தப்பட்டது. மாவட்டத்தில் நேற்று ஒரே நாளில் 3 ஆயிரத்து 947 பேருக்கு தடுப்பூசி செலுத்தப்பட்டது. அவர்களில் 2 ஆயிரத்து 888 பேர் 18 வயது முதல் 44 வயது வரையுள்ளவர்கள். மாவட்டத்தில் இதுவரை மொத்தம் 82 ஆயிரத்து 319 டோஸ் தடுப்பூசி செலுத்தப்பட்டது. அதில் முதல் தவணை தடுப்பூசியை 63 ஆயிரத்து 387 பேர் செலுத்திக் கொண்டனர். 18 ஆயிரத்து 932 பேர் இரு தவணை தடுப்பூசியும் செலுத்திக் கொண்டனர்.
Related Tags :
Next Story