நாகையில், சதம் அடித்த வெயில்


நாகையில், சதம் அடித்த வெயில்
x
தினத்தந்தி 28 May 2021 8:41 PM IST (Updated: 28 May 2021 8:41 PM IST)
t-max-icont-min-icon

நாகையில், வெயிலின் அளவு சதம் அடித்தது.

நாகப்பட்டினம்:
தமிழகத்தில் கடந்த 4-ந்தேதியன்று அக்னி நட்சத்திரம் தொடங்கியது. அன்றைய நாளில் இருந்து நாகையில் வெயிலின் தாக்கம் கடுமையாக இருந்தது. சுட்டெரித்த வெயிலால் மதிய வேளையில் வெளியில் செல்ல முடியவில்லை. பகலில் வாட்டி வதைக்கும் வெயிலின் தாக்கம் இரவிலும் தென்பட்டது. இதனால் மின்விசிறி இல்லாமல் தூங்க முடியாது என்ற நிலை ஏற்பட்டது.
இதற்கிடையில் 14, 20, 21 ஆகிய தேதிகளில் மட்டுமே நாகையில் மழை பெய்தது. மேலும் ஓரிரு நாட்களை தவிர, வெயில் 100 டிகிரியை தாண்டி சுட்டெரித்தது. இதனால் சாலைகளில் எங்கு பார்த்தாலும் கானல் நீராகவே தென்பட்டது. வாட்டி வதைத்த அக்னி நட்சத்திரம் இன்றுடன்(சனிக்கிழமை) நிறைவு பெறுகிறது. நேற்று நாகையில்  100 டிகிரி வெயில் சுட்டெரித்தது.

Next Story