நகையை திருடி சென்ற ஆசாமி
திருப்பூரில் ரியல் எஸ்டேட் அதிபர் வீட்டின் பூட்டை உடைத்து அங்கிருந்து ரூ.8 லட்சம் மற்றும் 10 பவுன் நகையை திருடி சென்ற ஆசாமிகளை போலீசார் தேடி வருகிறார்கள்.
மங்கலம்
திருப்பூரில் ரியல் எஸ்டேட் அதிபர் வீட்டின் பூட்டை உடைத்து அங்கிருந்து ரூ.8 லட்சம் மற்றும் 10 பவுன் நகையை திருடி சென்ற ஆசாமிகளை போலீசார் தேடி வருகிறார்கள்.
இது குறித்து போலீஸ் தரப்பில் கூறப்படுவதாவது
ரியல் எஸ்டேட் அதிபர்
தேனி மாவட்டம் ஆண்டிபட்டியை சேர்ந்தவர் சிவராஜ். ரியல் எஸ்டேட் தொழில் நடத்தி வருகிறார். இவர் தனது குடும்பத்துடன் திருப்பூர் பலவஞ்சிபாளையம் அருகே உள்ள சிவசக்தி நகரில் வசித்து வருகிறார். இவர் தனது குடும்பத்தினருடன் கடந்த 5ந் தேதி தனது சொந்த ஊரான ஆண்டிப்பட்டிக்கு சென்றார்.
பின்னர் கடந்த 26ந்தேதி சிவராஜ் வீட்டின் பின்பக்க கதவு பூட்டு உடைக்கப்பட்டிருப்பதாக பக்கத்து வீட்டுக்காரர் பார்த்து சிவராஜூக்கு செல்போன் மூலமாக தகவல் தெரிவித்தார். அதனைத்தொடர்ந்து திருப்பூர் திரும்பிய சிவராஜ் வீட்டின் உள்ளே சென்று பார்த்தார்.
ரூ.8லட்சம் திருட்டு
அப்போது பீரோவில் இருந்த 10 பவன் நகை மற்றும் ரூ.8 லட்சம் திருட்டு போயிருந்தது. இது குறித்து வீரபாண்டி போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. உடனே போலீசார் சம்பவம் நடந்த வீட்டிற்கு வந்து விசாரணை நடத்தினார்கள். விசாரணையில் சிவராஜ் சொந்த ஊருக்கு சென்று விட்டதை அறிந்த ஆசாமிகள், அவருடைய வீட்டிற்கு சென்று கதவின் பூட்டை உடைத்து உள்ளே சென்று அங்கிருந்த நகை மற்றும் பணத்தை திருடி சென்று இருப்பது தெரியவந்தது. இதையடுத்து
வீரபாண்டி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி, நகை,பணத்தை திருடிச்சென்ற மர்ம ஆசாமிகளை தேடி வருகின்றனர்.
---
Related Tags :
Next Story