கோவில்பட்டியில் கொரோனாவுக்கு மூதாட்டி பலி


கோவில்பட்டியில் கொரோனாவுக்கு மூதாட்டி பலி
x
தினத்தந்தி 28 May 2021 9:22 PM IST (Updated: 28 May 2021 9:22 PM IST)
t-max-icont-min-icon

கோவில்பட்டியில் கொரோனாவுக்கு மூதாட்டி பலியானார்

கோவில்பட்டி:
கோவில்பட்டி அரசு ஆஸ்பத்திரியில் கொரோனாவுக்கு 98 பெண்கள் உள்பட 156 பேர் சிகிச்சை ெபற்று வருகின்றனர். நேற்று புதிதாக தொற்று ஏற்பட்ட 7 பேர் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டனர். சிகிச்சையில் குணமடைந்த 28 பேர் நேற்று வீடு திரும்பினர். கொரோனாவுக்கு சிகிச்சை பெற்று வந்த நாயக்கர்பட்டியைச் சேர்ந்த 73 வயது மூதாட்டி சிகிச்சை பலனின்றி பரிதாபமாக இறந்தார்.
கோவில்பட்டி தனியார் கல்லூரி மையங்களில் 172 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். 352 பேர் வீடுகளில் தனிமைப்படுத்தி கொண்டு சிகிச்சையில் உள்ளனர்.

Next Story