தூத்துக்குடியில் வீடுபுகுந்து நகை திருடிய 2பேர் கைது


தூத்துக்குடியில் வீடுபுகுந்து நகை திருடிய 2பேர் கைது
x
தினத்தந்தி 28 May 2021 9:27 PM IST (Updated: 28 May 2021 9:27 PM IST)
t-max-icont-min-icon

தூத்துக்குடியில் வீடுபுகுந்து நகை திருடிய 2 பேர் கைது

தூத்துக்குடி:
தூத்துக்குடி கால்டுவெல் காலனியை சேர்ந்தவர் சந்தானகிருஷ்ணன் (வயது 46). இவர் கடந்த மாதம் 30-ந் தேதி வீட்டை பூட்டிவிட்டு ஊருக்கு சென்றார். கடந்த 2-ந் தேதி அன்று வீட்டுக்கு திரும்பி வந்தபோது, வீட்டின் முன்பக்க கதவு உடைக்கப்பட்டு கிடந்தது. வீட்டில் இருந்த 9 பவுன் நகை மற்றும் பொருட்கள் திருடப்பட்டு இருந்தன.
இதுகுறித்த புகாரின் பேரில் தென்பாகம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனர். விசாரணையில், தூத்துக்குடி மேல சண்முகபுரத்தைச் சேர்ந்த அற்புதராஜ் மகன் ஆரோக்கிய செல்வ சதீஷ் (வயது 20) மற்றும் தூத்துக்குடி முனியசாமிபுரத்தைச் சேர்ந்த ஜெயசீலன் மகன் டேனியல்ராஜ் (34) ஆகியோர் இந்த திருட்டு சம்பவத்தில் ஈடுபட்டு இருப்பது தெரியவந்தது. உடனடியாக போலீசார் 2 பேரையும் கைது செய்தனர். அவர்களிடம் இருந்து ரூ.2 லட்சம் மதிப்புள்ள 9 பவுன் தங்க வளையல்கள், லேப்டாப், செல்போன் உள்ளிட்ட பொருட்களை பறிமுதல் செய்தனர்.

Next Story