ராணிப்பேட்டை, திருப்பத்தூர் மாவட்டங்களில் ஒரே நாளில் 1,106 பேருக்கு கொரோனா. தொற்றுக்கு 23 பேர் பலி


ராணிப்பேட்டை, திருப்பத்தூர் மாவட்டங்களில் ஒரே நாளில் 1,106 பேருக்கு கொரோனா. தொற்றுக்கு 23 பேர் பலி
x
தினத்தந்தி 28 May 2021 9:30 PM IST (Updated: 28 May 2021 9:30 PM IST)
t-max-icont-min-icon

ராணிப்பேட்டை, திருப்பத்தூர் மாவட்டங்களில் நேற்று ஒரே நாளில் 1,106 பேருக்கு ெதாற்று உறுதியாகி உள்ளது 2 மாவட்டங்களிலும் நேற்று 23 பேர் பலியாகியுள்ளனர்.

ராணிப்பேட்டை-

கொரோனா தொற்று

தமிழகத்தில் கொரோனா 2-வது அலையால்  உயர்ந்து வந்த தொற்று மாநில அளவில் சரிய தொடங்கியுள்ளது. எனினும் சில மாவட்டங்களில் தொற்று எண்ணிக்கை அதே நிலையில் தான் உள்ளது.

ராணிப்பேட்டை மாவட்டத்தில் நேற்று வெளியான பரிசோதனை முடிவுகளின்படி 577 பேருக்கு கொரோனா நோய் தொற்று உறுதி செய்யப்பட்டது. மாவட்டம் முழுவதிலும்‌ அரசு, தனியார் ஆஸ்பத்திரிகளில் 4 ஆயிரத்து 653 பேர் கொரோனா நோய்‌ தொற்று காரணமாக அனுமதிக்கப்பட்டு, சிகிச்சை பெற்று வருகின்றனர். 

தொற்றின் காரணமாக நேற்று முன் தினம் 18 பேர் உயிரிழந்த நிலையில், நேற்றும் 18 பேர் இறந்து விட்டனர். ஆக மொத்தம் இரண்டு நாட்களில் 36 பேர் பலியாகி உள்ளனர். மாவட்ட நிர்வாகம் சார்பில், தொற்று தடுப்பு பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது.

திருப்பத்தூர்

திருப்பத்தூர் மாவட்டத்தில் நாளுக்கு நாள் கொரோனா தொற்றின் வேகம் அதிகரித்து வருகிறது. நேற்று மட்டும் மாவட்டத்தில் 529 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. மேலும் நேற்று 546 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். மாவட்டம் முழுவதும் 4 ஆயிரத்து 357 பேர் மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர். மாவட்டத்தில் நேற்று கொரோனாவிற்கு 5 பேர் உயிரிழந்துள்ளனர்.

மேலும் நேற்று மாவட்டத்தில் முதல் தடுப்பூசி 4 ஆயிரத்து 398 பேருக்கு போடப்பட்டுள்ளது. இதன் மூலம் 2 மாவட்டத்திலும் மொத்தம் 1,106 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. நேற்று ஒரே நாளில் 2 மாவட்டத்தையும் சேர்த்து 23 பேர் இறந்துள்ளனர்.

Next Story