திருச்செந்தூரில் சானிடைசர் குடித்த ஆட்டோ டிரைவர் சாவு


திருச்செந்தூரில் சானிடைசர் குடித்த ஆட்டோ டிரைவர் சாவு
x
தினத்தந்தி 28 May 2021 9:37 PM IST (Updated: 28 May 2021 9:37 PM IST)
t-max-icont-min-icon

திருச்செந்தூரில் சானிடைசர் குடித்த ஆட்டோ டிரைவர் இறந்தார்.

திருச்செந்தூர்:
திருச்செந்தூர் சன்னதி தெருவை சேர்ந்த சுப்பிரமணியம் மகன் மூர்த்தி (43). ஆட்டோ டிரைவர். இவருக்கு திருமணமாகி 12 ஆண்டுகள் ஆகிறது. கருத்து வேறுபாடு காரணமாக மனைவியை 7ஆண்டுகளாக பிரித்து வாழ்கிறார். மூர்த்திக்கு மது பழக்கம் உண்டு. கொரோனா முழு ஊரடங்கு காரணமாக கடந்த 10-ந் தேதி டாஸ்மாக் கடைகள் மூடப்பட்டன. இதனால் மது பழக்கத்திற்கு ஆளான மூர்த்தி மதுபானங்கள் இல்லாமல் தவித்துள்ளார். இதனால் அடிக்கடி சோடாவில் சானிடைசர் கலந்து குடித்து வந்துள்ளார். அதே போல நேற்று காலை சன்னதி தெருவில் உள்ள தனியார் நர்சரி பள்ளி பின்புறம் சானிடைசர் குடித்துள்ளார். அப்போது அவருக்கு கண் பார்வை மங்கி வயிற்று வலி ஏற்பட்டுள்ளது. இதுகுறித்து அவரது அண்ணன் ஐயப்பனிடம் தெரிவித்துள்ளார். உடனடியாக ஆஸ்பத்திரிக்கு அழைத்து செல்ல முயன்றனர். ஆனால் அதற்குள் மூர்த்தி இறந்துவிட்டார். இதுகுறித்து கோவில் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் தமிழ்மோகன் காந்தி வழக்குபதிவு செய்தார். இன்ஸ்பெக்டர் ஞானசேகரன் விசாரணை நடத்தி வருகிறார்.

Next Story