நீலகிரி மாவட்டத்தில் கொரோனாவால் இறந்தவரின் உடல் அஞ்சலிக்கு வைக்கப்பட்டதால் பரபரப்பு


நீலகிரி மாவட்டத்தில் கொரோனாவால் இறந்தவரின் உடல் அஞ்சலிக்கு வைக்கப்பட்டதால் பரபரப்பு
x
தினத்தந்தி 28 May 2021 10:28 PM IST (Updated: 28 May 2021 10:33 PM IST)
t-max-icont-min-icon

நீலகிரி மாவட்டத்தில் கொரோனாவால் இறந்தவரின் உடல் அஞ்சலிக்கு வைக்கப்பட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.

ஊட்டி,

நீலகிரி மாவட்டத்தில் தினமும் 400 பேருக்கும் மேல் கொரோனா பாதிப்பு உறுதியாகி வருகிறது. ஊட்டி நொண்டிமேடு பகுதியை சேர்ந்த ஒரு நபருக்கு கொரோனா உறுதியானது. அவர் சிகிச்சைக்காக கோவை அரசு மருத்துவமனைக்கு சென்றார். 

அங்கு படுக்கை கிடைக்காததால், 3 நாட்கள் ஆம்புலன்சில் ஆக்சிஜன் உதவியுடன் சிகிச்சை பெற்று வந்தார். பின்னர் அவர் மூச்சு திணறல் ஏற்பட்டு இறந்தார். கொரோனாவால் இறந்த நபரின் உடல் பாதுகாப்பு வழிமுறைகளின்படி அடக்கம் செய்யாமல் நேற்று முன்தினம் ஊட்டி கிரீன்பீல்டு பகுதியில் உறவினர்கள் இறுதி அஞ்சலி செலுத்துவதற்காக வைக்கப்பட்டது. 

இதுகுறித்து தகவல் அறிந்த நகராட்சி அதிகாரிகள் மற்றும் போலீசார் சம்பவ இடத்துக்கு சென்று தொற்று பாதிப்பால் இறந்தவர் உடலை பொதுஇடத்தில் வைக்கக்கூடாது என்று எச்சரித்து, உடலை பாதுகாப்பாக மீட்டு நகராட்சிக்கு உட்பட்ட மஞ்சனக்கொரை மின் மயானத்தில் எரியூட்டினர்.

 இதை தொடர்ந்து அவரது உறவினர்கள், உடலை எடுத்து வந்த ஆம்புலன்ஸ் டிரைவர்கள், உதவியாளர்கள் என 20-க்கும் மேற்பட்டோருக்கு கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது. இந்த சம்பவத்தால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.


Next Story