சாராயம் கடத்திய 2 பேர் கைது


சாராயம் கடத்திய 2 பேர் கைது
x
தினத்தந்தி 28 May 2021 10:38 PM IST (Updated: 28 May 2021 10:38 PM IST)
t-max-icont-min-icon

மூங்கில்துறைப்பட்டு அருகே சாராயம் கடத்திய 2 பேர் கைது

மூங்கில்துறைப்பட்டு

மூங்கில்துறைப்பட்டு சப்-இன்ஸ்பெக்டர் உலகநாதன் மற்றும் போலீசார் அருளம்பாடி சாலையில் வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தனர். அப்போது அந்த வழியாக வந்த மோட்டார் சைக்கிளை மறித்து அதில் வந்தவர்களிடம் விசாரித்தனர். விசாரணையில் அவர்கள் உலகலாப்பாடி கிராமத்தைச் சேர்ந்த முருகேசன்(வயது 58), ஆலன் மகன் சரவணன்(26) என்பதும், சாராயம் கடத்தி வந்ததும் தெரியவந்தது. இதையடுத்து முருகேசன், சரவணன் ஆகிய 2 பேரை கைது செய்த போலீசார் அவர்களிடமிருந்த 50 லிட்டர் சாராயத்தை பறிமுதல் செய்தனர். 





Next Story