விறகுக்கு பதில் நிலக்கிரியை பயன்படுத்துவதால் வெளியேறும் புகையால் உடல்நலக்குறைவு
தனியார் தேயிலை தொழிற்சாலையில் விறகுக்கு பதில் நிலக்கிரியை பயன்படுத்துவதால் வெளியேறும் புகையால் உடல்நலக்குறைவு ஏற்படுவதாக பொதுமக்கள் புகார் தெரிவித்து உள்ளனர்.
கோத்தகிரி,
நீலகிரி மாவட்டம் கோத்தகிரி அருகே கன்னேரிமுக்கு பகுதியில் தனியாருக்கு சொந்தமான தேயிலை தொழிற்சாலை உள்ளது. இந்த தொழிற்சாலையில் தேயிலைத்தூள் தயாரிக்கும் பணிக்கு விறகுக்கு பதில் நிலக்கிரி பயன்படுத்தப்படுவதாக தெரிகிறது.
இதன் காரணமாக வழக்கத்தைவிட அதிகளவில் புகை வெளியேறுகிறது. மேலும் அங்கு பணியாற்றும் தொழிலாளர்கள் மற்றும் அக்கம்பக்கத்தில் வசிக்கும் பொதுமக்களுக்கு மூச்சுத்திணறல், கண் எரிச்சல், வாந்தி, தலைச்சுற்றல் போன்ற உடல் நலக்குறைவு ஏற்படுவதாக கூறப்படுகிறது.
இதுகுறித்து அந்த பகுதி மக்கள் கூறியதாவது:- எங்கள் பகுதியில் உள்ள தனியார் தேயிலை தொழிற்சாலையில் விறகுக்கு பதில் நிலக்கிரியை பயன்படுத்துகின்றனர். இதன் மூலம் வெளியாகும் புகையால் உடல் நலக்குறைவு ஏற்படுகிறது. இதுகுறித்து புகார் தெரிவித்தும் சம்பந்தப்பட்ட தொழிற்சாலை நிர்வாகம் நடவடிக்கை எடுக்கவில்லை.
எனவே பொதுமக்கள் நலன்கருதி மாவட்ட நிர்வாகத்தினர் மற்றும் மாசு கட்டுப்பாட்டு வாரிய அதிகாரிகள் அந்த தொழிற்சாலையில் நேரில் ஆய்வு செய்து, உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு அவர்கள் கூறினார்கள்.
Related Tags :
Next Story