2 சப்-இன்ஸ்பெக்டர்கள் உள்பட 3 பேருக்கு மீண்டும் தொற்று


2 சப்-இன்ஸ்பெக்டர்கள் உள்பட 3 பேருக்கு மீண்டும் தொற்று
x
தினத்தந்தி 28 May 2021 10:55 PM IST (Updated: 28 May 2021 10:55 PM IST)
t-max-icont-min-icon

ராமநாதபுரம் மாவட்டத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்ட 2 சப்-இன்ஸ்பெக்டர்கள் உள்பட 3 பேருக்கு மீண்டும் தொற்று உறுதியாகி உள்ளது. கொரோனா தொற்றுக்கு உள்ளாகி ஆக்சிஜன் அளவு குறைந்து நினைவிழந்த நிலைக்கு சென்ற போலீஸ் துணை சூப்பிரண்டுக்கு மேல்சிகிச்சை அளிக்க நடவடிக்கை எடுத்து போலீஸ் சூப்பிரண்டு காப்பாற்றி உள்ளார்.

ராமநாதபுரம், 
ராமநாதபுரம் மாவட்டத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்ட 2 சப்-இன்ஸ்பெக்டர்கள் உள்பட 3 பேருக்கு மீண்டும் தொற்று உறுதியாகி உள்ளது. கொரோனா தொற்றுக்கு உள்ளாகி ஆக்சிஜன் அளவு குறைந்து நினைவிழந்த நிலைக்கு சென்ற போலீஸ் துணை சூப்பிரண்டுக்கு மேல்சிகிச்சை அளிக்க நடவடிக்கை எடுத்து போலீஸ் சூப்பிரண்டு காப்பாற்றி உள்ளார்.
பரிசோதனை முகாம்
ராமநாதபுரம் மாவட்டத்தில் கொரோனா தொற்றினால் ஏற்கனவே 145 போலீசார் பாதிக்கப்பட்டனர்.
இவர்களில் சிலர் அரசு மற்றும் தனியார் ஆஸ்பத்திரிகளிலும், பெரும்பாலோர் வீடுகளில் தனிமைப்படுத்திக்கொண்டும் சிகிச்சை பெற்று வருகின்றனர். அவர்களில் 74 பேர் குணமடைந்து உள்ளனர். மீதம் உள்ள 71 பேர் தொடர் சிகிச்சையில் இருந்து வருகின்றனர். 
இந்தநிலையில் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்த 2 சப்-இன்ஸ்பெக்டர்கள், ஒரு போலீஸ்காரர் ஆகியோருக்கு 15 தினங்களுக்கு பின்னர் குணமடைந்துவிட்டனரா என நேற்று முன்தினம் மீண்டும் கொரோனா பரிசோதனை செய்யப்பட்டதில் தொற்று மீண்டும் உறுதி செய்யப்பட்டுஉள்ளது. இதனை தொடர்ந்து அவர்கள் 3 பேருக்கும் தொடர் சிகிச்சை அளிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு உள்ளது.
மாவட்டத்தில் அதிகமான போலீசார் கொரோனா தொற்றுக்கு உள்ளானதை தொடர்ந்து கொரோனா காவல் கட்டுப்பாட்டு அறை அதிகாரிகள் மூலம் காவல்துறையில் நோய்த்தொற்றுக்கு உள்ளான போலீசாரை தினமும் கண்காணித்து அவர்களின் உடல்நலம் மற்றும் ஆக்சிஜன் அளவை காலை பிற்பகல் மாலை என 3 தடவை அறிக்கையாக அளிக்க மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு கார்த்திக் உத்தரவிட்டுள்ளார். 
சிகிச்சை
இதில் உடல்நிலை பாதிப்பு மற்றும் ஆக்சிஜன் அளவு குறைந்துள்ள போலீசாரை உடனடியாக ஆஸ்பத்திரியில் அனுமதிக்கவும், அங்கு சிகிச்சை பெறுபவர்களுக்கு மேலும் சிகிச்சையை தீவிரப்படுத்தவும் நடவடிக்கை எடுத்து வருகிறார். இவ்வாறு கடந்த 3 நாட்களுக்கு முன்னர் கீழக்கரை துணை போலீஸ் சூப்பிரண்டுக்கு தொற்று உறுதியாகி சிகிச்சை பெற்று வந்த நிலையில் ஆக்சிஜன் அளவு குறைந்துவிட்டது. உடனடியாக அதனை கண்டறிந்து அவரை அங்கிருந்து ராமநாதபுரம் அரசு ஆஸ்பத்திரியில் சேர்க்க போலீஸ் சூப்பிரண்டு நடவடிக்கை எடுத்துள்ளார். ராமநாதபுரம் அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சையில் இருந்தபோது மேலும் ஆக்சிஜன் அளவு 78 என்ற நிலையில் இருந்து படிப்படியாக குறைந்து வந்து நினைவு குறைந்த நிலைக்கு சென்றுவிட்டார்.
இதுபற்றி அறிந்த போலீஸ் சூப்பிரண்டு கார்த்திக் நேரடியாக ஆஸ்பத்திரிக்கு வந்து தனி ஆம்புலன்சில் துணை போலீஸ் சூப்பிரண்டுவை ஏற்றி மதுரை தனியார் ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்துள்ளார். அங்கு சிகிச்சைக்கு பின்னர் துணை போலீஸ் சூப்பிரண்டு தனக்கு ஆக்சிஜன் அளவு சீராகி விட்டதாக தகவல் அனுப்பி வீடியோ காலில் பேசி நன்றி தெரிவித்துள்ளார். 
அறிவுரை
இதுதவிர, தினமும் காலை மாலை இருவேளையும் மைக்கில் போலீசாருக்கு முககவசம் அணிதல், சமூக இடைவெளி, கைகழுவுதல் போன்றவைகளை முதலில் செய்துவிட்டு வாகன பரிசோதனை உள்ளிட்டவற்றை மேற்கொள்ளுமாறு அறிவுரை கூறி வருகிறார். போலீசாரை கொரோனா தொற்றில் இருந்து காப்பதற்காக போலீஸ் சூப்பிரண்டு எடுத்து வரும் நடவடிக்கைக்கு போலீசார் நன்றி தெரிவித்துள்ளனர்.

Next Story