மாவட்டத்தில் கொரோனாவுக்கு பெண் பலி மொத்த பாதிப்பு 20 ஆயிரத்தை கடந்தது
மாவட்டத்தில் கொரோனாவுக்கு பெண் பலி மொத்த பாதிப்பு 20 ஆயிரத்தை கடந்தது
கள்ளக்குறிச்சி
பெண் பலி
கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் ஏற்கனவே 19 ஆயிரத்து 833 பேர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். இவர்களில் 15 ஆயிரத்து 974 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். இதுவரை 128 பேர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளனர்.
இந்த நிலையில் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு நாமக்கல் மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சைபெற்று வந்த கள்ளக்குறிச்சி மாவட்டத்தை சேர்ந்த 70 வயது பெண் சிகிச்சை பலன் இன்றி உயிரிழந்தார். இதையடுத்து மாவட்டத்தில் கொரோனாவுக்கு பலியானவர்களின் மொத்த எண்ணிக்கை 129-ஆக உயர்ந்தது.
340 பேருக்கு தொற்று
இந்த நிலையில் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் உறவினர்கள் மற்றும் அவர்களுடன் தொடர்பில் இருந்தவர்கள் என 1,100 பேரின் உமிழ்நீர் பரிசோதனை முடிவு நேற்று வெளியானது. இதில் 340 பேருக்கு தொற்று உறுதியாகியுள்ளதை அடுத்து மாவட்டத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை 19 ஆயிரத்து 833-ல் இருந்து 20 ஆயிரத்து 173-ஆக உயர்ந்துள்ளது.
கள்ளக்குறிச்சி அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனை மற்றும் தனியார் மருத்துவமனைகளில் 4 ஆயிரத்து 70 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
Related Tags :
Next Story