கல்லால் தாக்கி வாலிபர் படுகொலை
கல்லால் தாக்கி வாலிபர் படுகொலை
துடியலூர்
மதுபோதையில் ஏற்பட்ட தகராறில், கல்லால் தாக்கி வாலிபர் கொலை செய்யப்பட்டார். இது தொடர்பாக அவரது தாய்மாமாவை போலீசார் கைது செய்தனர்.
துடியலூர் அருகே நடந்த இந்த சம்பவம் குறித்து போலீஸ் தரப்பில் கூறப்படுவதாவது
தனியார் நிறுவன ஊழியர்
கோவையை அடுத்த துடியலூர் என்.ஜி.ஜி.ஓ. காலனி அசோகாபுரத்தை சேர்ந்தவர் தேவராஜ். இவருடைய மகன் பத்மநாபன் (வயது 28). தனியார் நிறுவன ஊழியர். திருமணமான இவர், குடும்ப தகராறு காரணமாக மனைவியை பிரிந்து தனியாக வசித்து வந்தார்.
இந்தநிலையில் நேற்று இவர், வடமதுரை பழனிகவுண்டன்புதூரில் உள்ள தனது தாய்மாமா கண்ணன் (44) வீட்டுக்கு சென்றார். அங்கு அவர்கள் 2 பேரும் சேர்ந்து மது குடித்துள்ளனர்.
கல்லால் தாக்கி கொலை
அப்போது, குடும்ப பிரச்சினை குறித்து பேசியதால் அவர்கள் இடையே தகராறு ஏற்பட்டது. இதில் ஆத்திரம் அடைந்த கண்ணன், பத்மநாபனை கல், தடி மற்றும் பளுதூக்கும் கம்பியாலும் சரமாரியாக தாக்கி உள்ளார்.
இதில் படுகாயம் அடைந்த பத்மநாபன் ரத்த வெள்ளத்தில் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தார். இதுகுறித்த புகாரின் பேரில் துடியலூர் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று விசாரணை நடத்தினர்.
கைது
இதையடுத்து போலீஸ் துணை சூப்பிரண்டு கிருஷ்ணமூர்த்தி மேற்பார்வையில் இன்ஸ்பெக்டர் பாலமுரளிசுந்தரம் மற்றும் போலீசார் வழக்கு பதிவு செய்து கண்ணனை நேற்று கைது செய்தனர்.
பின்னர் அவரை சிறை யில் அடைத்தனர்.
Related Tags :
Next Story