நாமகிரிப்பேட்டையில் 4 மளிகை கடைகளுக்கு ‘சீல்’


நாமகிரிப்பேட்டையில் 4 மளிகை கடைகளுக்கு ‘சீல்’
x
தினத்தந்தி 29 May 2021 12:00 AM IST (Updated: 29 May 2021 12:00 AM IST)
t-max-icont-min-icon

நாமகிரிப்பேட்டையில் 4 மளிகை கடைகளுக்கு ‘சீல்’ வைக்கப்பட்டது.

நாமகிரிப்பேட்டை:
நாமகிரிப்பேட்டை பேரூராட்சியில் உள்ள வெள்ளக்கல் கிராமத்தில் சிலர் கடைகளை திறந்து வைத்து வியாபாரம் செய்து வருவதாக போலீசார், வருவாய்த்துறையினருக்கு தகவல் கிடைத்தது. அதன்பேரில் நாமகிரிப்பேட்டை போலீஸ் இன்ஸ்பெக்டர் இந்திரா (பொறுப்பு), சப்-இன்ஸ்பெக்டர் விஜயராஜ் மற்றும் போலீசார், வருவாய்த்துறையினர் அந்த பகுதியில் ஆய்வு செய்தனர். அப்போது முத்து, லிங்கதுரை, தங்கதுரை, முருகன் ஆகிய 4 பேர் தங்களது மளிகை கடைகளை திறந்து வியாபாரம் செய்து வந்தது கண்டுபிடிக்கப்பட்டது. இதையடுத்து வருவாய்த்துறையினர் 4 மளிகை கடைகளையும் பூட்டி, சீல் வைத்தனர்.

Next Story