எருமப்பட்டி ஒன்றியத்தில் கொரோனா தடுப்பு பணிகளை ஊரக வளர்ச்சி கூடுதல் இயக்குனர் ஆய்வு


எருமப்பட்டி ஒன்றியத்தில் கொரோனா தடுப்பு பணிகளை ஊரக வளர்ச்சி கூடுதல் இயக்குனர் ஆய்வு
x
தினத்தந்தி 29 May 2021 12:00 AM IST (Updated: 29 May 2021 12:00 AM IST)
t-max-icont-min-icon

எருமப்பட்டி ஒன்றியத்தில் கொரோனா தடுப்பு பணிகளை ஊரக வளர்ச்சி கூடுதல் இயக்குனர் ஆய்வு செய்தார்

எருமப்பட்டி:
எருமப்பட்டி ஒன்றியத்துக்குட்பட்ட பகுதிகளில் கொரோனாவின் 2-வது அலையை கட்டுப்படுத்த நோய் தடுப்பு பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது. இந்த பணிகளை ஊரக வளர்ச்சித்துறை கூடுதல் இயக்குனர் குமார் நேற்று ஆய்வு செய்தார். மேலும் வாழவந்தி ஊராட்சியில் நடைபெற்ற காய்ச்சல், சளி பாதிப்பு கண்டறியும் பணிகளையும் பார்வையிட்டார். அப்போது களப்பணியை விரைந்து முடிக்கவும், அனைத்து விவரங்களை முறையாக பதிவு செய்யவும் அறிவுறுத்தினார். தொடர்ந்து வடவத்தூர் ஊராட்சி ஜம்புடை கிராமத்தில் தூய்மை பணிகளை பார்வையிட்டார். எம்.மேட்டுப்பட்டி ஊராட்சியில் நடந்த காய்ச்சல் மற்றும் தடுப்பூசி போடும் முகாமையும் ஆய்வு செய்து பொதுமக்களுக்கு கபசுர குடிநீர் வழங்கினார். தொடர்ந்து வடுகப்பட்டியில் நடமாடும் வாகனம் மூலம் காய்கறி விற்பனை செய்யும் பணியையும் பார்வையிட்டார். இந்த ஆய்வின் போது நாமக்கல் மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குனர் மலர்விழி, மகளிர் திட்ட இயக்குனர் பிரியா, செயற்பொறியாளர் முத்துசாமி, எருமப்பட்டி வட்டார வளர்ச்சி அலுவலர்கள் குணாளன், அருளாளன், எருமப்பட்டி உதவி பொறியாளர்கள் சாந்தி குணசேகரன் மற்றும் ஊராட்சி மன்ற தலைவர்கள், செயலாளர்கள் உடன் இருந்தனர்.

Next Story