வீட்டில் பதுக்கி வைத்திருந்த 20 கிலோ கஞ்சா பறிமுதல்; வாலிபர் கைது
வீட்டில் பதுக்கி வைத்திருந்த 20 கிலோ கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டது. இதுதொடர்பாக ஒரு வாலிபர் கைது செய்யப்பட்டார்.
திருச்சி,
திருச்சி உறையூர் ஆதிநகரில் ஒரு வீட்டில் கஞ்சா பதுக்கி வைத்திருப்பதாக உறையூர் போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதையடுத்து போலீஸ் இன்ஸ்பெக்டர் மணிராஜ் தலைமையிலான போலீசார் நேற்றுப் பகல் அங்கு விரைந்து சென்று அந்த வீட்டில் அதிரடியாக சோதனை நடத்தினார்கள். அப்போது ரூ.2 லட்சம் மதிப்புள்ள 20 கிலோ கஞ்சா பதுக்கி வைக்கப்பட்டிருந்தது தெரியவந்தது. இதுதொடர்பாக அங்கிருந்த புத்தூர் எம்.ஜி.ஆர்.நகரை சேர்ந்த ஹரிஹரன் (வயது 21) என்பவரை கைது செய்த போலீசார், அவரிடம் இருந்த கஞ்சாவை பறிமுதல் செய்தனர். இந்த வழக்கில் மேலும் 2 பேரை தேடி வருகிறார்கள்.
Related Tags :
Next Story