மாவட்ட செய்திகள்

திசையன்விளையில்ஆக்கிரமிப்பு கடைகள் அகற்றம் + "||" + Removal of occupation shops

திசையன்விளையில்ஆக்கிரமிப்பு கடைகள் அகற்றம்

திசையன்விளையில்ஆக்கிரமிப்பு கடைகள் அகற்றம்
திசையன்விளையில் ஆக்கிரமிப்பு கடைகள் அகற்றப்பட்டன.
திசையன்விளை:

திசையன்விளை வாரச்சந்தை, தினசரி மார்க்கெட் அருகில் நகர பஞ்சாயத்துக்கு சொந்தமான நேரு திடல் உள்ளது. இந்த திடல் பொதுக் கூட்டங்கள் நடத்துவதற்கு பயன்படுத்தப்பட்டு வந்தது. சமீப காலமாக நேரு திடலில் 25-க்கும் மேற்பட்ட பல்வேறு வகையான நடைபாதை கடைகள் வரத்தொடங்கியது. நாளடைவில் அந்த கடைகள் அகற்றப்படாமல் கொட்டகைகள் அமைக்கப்பட்டு அங்கேயே நிரந்தரமாக செயல்பட்டு வந்தது. இதனால் போக்குவரத்திற்கு இடையூறு ஏற்பட்டது.

மேலும் சமீபத்தில் பெய்த மழையால் நேரு திடலில் தேங்கிய மழை நீர் காரணமாக சுகாதார கேடு ஏற்பட்டது. இந்த நிலையில் நேற்று திசையன்விளை நகர பஞ்சாயத்து செயல் அலுவலர் பாலசுப்பிரமணியன், சுகாதார ஆய்வாளர் எட்வின் மற்றும் நகர பஞ்சாயத்து தூய்மை பணியாளர்கள் நேரு திடலில் ஆக்கிரமிப்பு செய்யப்பட்டு இருந்த கடைகளை அகற்றினர்.

தொடர்புடைய செய்திகள்

1. பொதுமக்களுக்கு இடையூறாக இருந்த விளம்பர பதாகைகள் அகற்றம்
பொதுமக்களுக்கு இடையூறாக இருந்த விளம்பர பதாகைகள் அகற்றப்பட்டது.
2. நெற்பயிர்கள் அழிப்பு;தென்னை மரங்கள் வெட்டி அகற்றம்
விழுப்புரம்- புதுச்சேரி வரை தேசிய நெடுஞ்சாலைக்காக நெற்பயிர்கள் அழிக்கப்பட்டதோடு, தென்னை மரங்கள் வெட்டி அகற்றப்பட்டன. இந்த பணியை தடுத்து நிறுத்தி விவசாயிகள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
3. சாலை ஆக்கிரமிப்புகள் அகற்றம்
சிதம்பரத்தில் சாலையை ஆக்கிரமித்து அமைக்கப்பட்டிருந்த கடைகளை அதிகாரிகள் அதிரடியாக அகற்றினர்.
4. ஆக்கிரமிப்பு கடைகள், வீடுகள் அகற்றம்
ஆக்கிரமிப்பு கடைகள், வீடுகள் அகற்றம்