திண்டுக்கல் மாவட்டத்தில் 19 வட்டார வளர்ச்சி அலுவலர்கள் இடமாற்றம்
திண்டுக்கல் மாவட்டத்தில் 19 வட்டார வளர்ச்சி அலுவலர்களை இடமாற்றம் செய்து கலெக்டர் விஜயலட்சுமி உத்தரவிட்டார்.
திண்டுக்கல்:
திண்டுக்கல் மாவட்டத்தில் 19 வட்டார வளர்ச்சி அலுவலர்களை இடமாற்றம் செய்து கலெக்டர் விஜயலட்சுமி உத்தரவிட்டார். அதன்படி தொப்பம்பட்டி வட்டார வளர்ச்சி அலுவலர் கண்ணன் (வட்டார ஊராட்சி) ஒட்டன்சத்திரத்துக்கும், அங்கு பணியாற்றும் அந்தோணியார் (கிராம ஊராட்சி) தொப்பம்பட்டிக்கும், ஆத்தூர் வட்டார வளர்ச்சி அலுவலர்கள் ரவீந்திரன் (வ.ஊ) வடமதுரைக்கும், தட்சிணாமூர்த்தி (கி.ஊ) ஆத்தூருக்கும், வடமதுரையில் பணியாற்றும் செல்வராஜ் (கி.ஊ) வத்தலக்குண்டுக்கும், வேதா (வ.ஊ) ரெட்டியார்சத்திரத்துக்கும், வத்தலக்குண்டுவில் பணியாற்றும் குணவதி (கி.ஊ) நிலக்கோட்டைக்கும், முனியாண்டி (வ.ஊ) வடமதுரைக்கும், நிலக்கோட்டையில் பணியாற்றும் லாரன்ஸ் (வ.ஊ) ஆத்தூருக்கும், வசந்தா (கி.ஊ). குஜிலியம்பாறைக்கும் இடமாற்றம் செய்யப்பட்டனர்.
அதேபோல் குஜிலியம்பாறை வட்டார வளர்ச்சி அலுவலர்கள் மணிமுத்து (வ.ஊ) சாணார்பட்டிக்கும், அங்கு பணியாற்றும் கிருஷ்ணன் (கி.ஊ) நிலக்கோட்டைக்கும், சாணார்பட்டியில் பணியாற்றும் அருள்கலாவதி (வ.ஊ.) கிருஷ்ணன் பணியிடத்துக்கும், நிலக்கோட்டையில் பணியாற்றும் வசந்தா (கி.ஊ.) குஜிலியம்பாறைக்கும், கலெக்டர் அலுவலக வளர்ச்சி பிரிவு மேலாளர் ஜெயச்சந்திரன் வத்தலக்குண்டுக்கும், ரெட்டியார்சத்திரத்தில் பணியாற்றும் ஜெசிஞானசேகர் (கி.ஊ) பழனிக்கும், முத்துக்குமரன் (வ.ஊ) கலெக்டர் அலுவலக வளர்ச்சி பிரிவு மேலாளராகவும், பழனியில் பணியாற்றும் பிரபாகரன் (வ.ஊ) வேடசந்தூருக்கும், வேடசந்தூரில் பணியாற்றும் திருமலைசாமி (கி.ஊ) மாவட்ட ஊரக வளர்ச்சி முகமைக்கும், அங்கு பணியாற்றும் விஜயலட்சுமி ரெட்டியார்சத்திரத்துக்கும் இடமாற்றம் செய்யப்பட்டு உள்ளனர்.
Related Tags :
Next Story