கொரோனாவுக்கு பலியானவர்களின் எண்ணிக்கை 100-ஆக உயர்வு


கொரோனாவுக்கு பலியானவர்களின் எண்ணிக்கை 100-ஆக உயர்வு
x
தினத்தந்தி 29 May 2021 1:18 AM IST (Updated: 29 May 2021 1:18 AM IST)
t-max-icont-min-icon

அரியலூர் மாவட்டத்தில் கொரோனாவுக்கு பலியானவர்களின் எண்ணிக்கை 100-ஆக உயர்ந்துள்ளது.

அரியலூர்:

7 பேர் பலி
அரியலூர் மாவட்டத்தில் நேற்று ஒரே நாளில் 229 பேர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். இதனால் பாதிப்பு எண்ணிக்கை 10,510 ஆக உயர்ந்துள்ளது. தற்போது மாவட்டத்தில் கொரோனாவால் உயிரிழப்பவர்களின் எண்ணிக்கையும் அதிகரித்து வருகிறது. ஏற்கனவே மாவட்டத்தில் கொரோனாவிற்கு 93 பேர் உயிரிழந்துள்ளனர்.
இந்த நிலையில் கொரோனாவுக்கு அரியலூர் அரசு மருத்துமனையில் சிகிச்சை பெற்று வந்த, அரியலூர் மாவட்டத்தை சேர்ந்த 72, 63 வயதுடைய பெண்கள் 2 பேரும், 73, 70, 45 வயதுடைய ஆண்கள் 3 பேரும், அரியலூரில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த 60 வயதுடைய ஆண் ஒருவரும், 54 வயதுடைய பெண் ஒருவரும் என மொத்தம் 7 பேர் சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்துள்ளனர்.
பலி எண்ணிக்கை 100-ஐ தொட்டது
இதனால் மாவட்டத்தில் கொரோனாவால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 100-ஐ தொட்டது. தொடர்ந்து உயிரிழப்புகள் ஏற்படுவது அரியலூர் மாவட்ட பொதுமக்களிடையே அச்சத்தை ஏற்படுத்தி உள்ளது. மருத்துவமனைகளில் இருந்து கொரோனாவுக்கு 7,937 பேர் சிகிச்சை பெற்று வீடு திரும்பியுள்ளனர். தற்போது 2,473 பேர் கொரோனாவுக்கு மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

Related Tags :
Next Story